(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

வந்து அமர்ந்தனர்.

  

மாதவி சட்டென ஒதுங்கி நின்று திருமணத்தைப் பார்த்தாள், கண்ணகி மகிழ்வாக இருந்தாள் அதைக்கண்டு மாதவி புன்னகை பூத்தாள் அடுத்து கோவலனின் முகத்தைப் பார்த்தாள் இருண்டுபோயிருக்க அதிர்ந்தாள்

  

”கோவலனுக்கு என்னாச்சி, எதையோ பறி கொடுத்தது போல உட்கார்ந்திருக்காரு நேத்து ரிசப்ஷன்லகூட சோகமா இருந்தாரு, இப்ப என்னடான்னா கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லாம இருக்காரே என்ன நடக்குது இங்க, உண்மையில இவருக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்கா இல்லையா” என நினைத்து குழம்ப

  

சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து முகூர்த்த நேரத்தில் கோவலன் கையில் தாலி வந்து சேர்ந்து அவனோ அதை வாங்கி வெறுப்புடன் பார்த்து திரும்பி கண்ணகியின் கழுத்தில் கட்டினான், ஒரு சின்ன மகிழ்ச்சியோ புன்னகையோகூட இல்லை, வேண்டா வெறுப்பாக நடந்தேறியது அவனது திருமணம், கண்ணகிக்கு நடந்தது எதுவும் தெரியாத காரணத்தால் அந்த திருமணத்தால் அவள் பூரித்துப் போயிருந்தாள், மாதவியால் அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்கவில்லை, ஏனோ அவளின் மனது கனத்துவிட்டது, இருந்து இருந்து தன்னால் கண்ணகிக்கு கஷ்டம் வரக்கூடாது என எண்ணி சட்டென ஈஸ்வரமூர்த்தியிடம் சொல்லிவிட்டு தன் வீட்டிற்குச் சென்றாள். அங்கு சென்று ஓவென அழுது தனது துக்கத்தை ஆற்றினாள்.

  

திருமணம் முடிந்ததும் வந்திருந்த மக்களின் ஆசிகளும் வாழ்த்துக்களும் பெற்றுக் கொண்டார்கள், அடுத்து விருந்து அதுவும் முடிந்த கையோடு மணமக்களை அழைத்துக் கொண்டு தன் வீடு திரும்பினார் ஈஸ்வரமூர்த்தி, சொந்தத்தில் ஒரு பெண் ஆரத்தி எடுக்க மகிழ்வுடன் அந்த வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து உரிமையுடன் கோவலனின் கரம் பற்றி நுழைந்தாள் கண்ணகி, கோவலனும் அனைவரின் முன் தன் வெறுப்பை காட்டாமல் பொறுத்துக் கொண்டான், வீடு வந்ததும் சட்டென தன் அறைக்கு சென்றுவிட்டான்.

  

அவனது செயல் கண்ணகிக்கு ஆச்சர்யத்தை தந்தது ஆனால் சந்தேகப்படவில்லை கலங்கவில்லை. ஈஸ்வரமூர்த்தியின் காலில் விழுந்து ஆசி பெற்றாள் அவருக்கு நிம்மதி பிறந்தது மகிழ்வுடன் இருந்தார்

  

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.