”இனி இதுதான் உன் வீடு, நீ இங்க சந்தோஷமா இருக்கனும்” என சொல்ல அவளும் சரியென்றாள்.
அவளுக்கென தனிஅறை ஒதுக்கப்பட்டது.
அன்றைய இரவு சாந்தி முகூர்த்தத்துக்கு தேவையான ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கின அது தெரிந்ததும் ஈஸ்வரமூர்த்தியிடம் வந்து சண்டையிட்டான் கோவலன்
”நீங்க சொன்னது போல கண்ணகியை கல்யாணம் செய்துக்கிட்டேன் அதோட முடிஞ்சது எதுக்காக ரூமை அலங்காரம் செய்றீங்க”
”எதுக்கா ஏன்னு உனக்குத் தெரியாதா கல்யாணம் ஆனதும் நடக்க வேண்டிய சம்பிரதாயங்களை செய்யனும்“
”எதை சொல்றீங்க முதலிரவு பத்தியா”
”ஆமாம்”
”எனக்குப் பிடிக்கலை தாத்தா இந்த கல்யாணத்தையே உங்களுக்காக செய்துக்கிட்டேன் அதுலயே எனக்கு விருப்பம் இல்லைன்னு நல்லா தெரிஞ்சிருந்தும் எப்படி உங்களால முதலிரவுக்கான ஏற்பாடுகளை செய்ய முடியுது”
“இப்படியேவா நீ இருந்துடப் போற, கல்யாணம் ஆயிடுச்சி, கண்ணகிதான் உன் மனைவி அவளோட வாழ பாரு, பிடிக்குதோ பிடிக்கலையோ அவளோட வாழ ஆரம்பி கொஞ்ச நாள் போனா உனக்கே இந்த வாழ்க்கை பிடிச்சிடும்”
”இல்லை தாத்தா, நீங்க நினைக்கறது தப்பு, கல்யாணம் வேணா உங்க விருப்பப்படி நடந்திருக்கலாம் ஆனா என் வாழ்க்கையை நான்தான் வாழனும், உங்களால எதையும் செய்ய முடியாது கண்ணகிக்கு நீங்க நல்லது செய்றதா நினைச்சி சந்தோஷப்படறீங்க, ஆனா அது தப்புன்னு ஒரு நாள் நீங்க உணர்ந்து வருத்தப்படுவீங்க” என சொல்லிவிட்டு சென்றான்.