(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

அவனது பேச்சை அச்சமயம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

  

கண்ணகியும் புது வாழ்க்கையை தொடரப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்தாள். அவளது உடைமைகள் அனைத்தையும் மாதவி ஏற்கனவே கோவலனின் வீட்டிற்கு அனுப்பிவிட்டிருந்தாள் அதனால் அந்த உடைமைகளை எடுத்து பிரித்தவள் தனது தாய் தந்தை போட்டோவைக் கண்டதும் வருந்தினாள்

  

”எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி ஆனா நீங்க என்கூட இல்லை நீங்க மட்டும் இப்ப இருந்திருந்தா நான் படற சந்தோஷத்தைப் பார்த்து நீங்களும் சந்தோஷப்பட்டிருப்பீங்க, நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்” என அழுதபடி சொல்லிக் கொண்டிருக்க அதைக்கேட்டபடி வந்தார் ஈஸ்வரமூர்த்தி

  

”கவலைப்படாதம்மா உன்னை நினைச்சி உங்கப்பா அம்மா சந்தோஷப்படுவாங்க அவங்களோட ஆத்மா இந்நேரம் சாந்தியாகியிருக்கும்” என சொல்ல அவளோ புன்னகை பூத்தாள்

  

”இப்படித்தான் எப்பவும் சிரிச்சபடி இருக்கனும் ரெடியாயிட்டியாம்மா”

  

”ரெடியாயிட்டேன் தாத்தா”

  

”சரிம்மா வா”

  

”எங்க தாத்தா”

  

”புது வாழ்க்கையை நீ ஆரம்பிக்க வேணாமா” என கேட்க அவள் வெட்கத்தில் நாணி கோணி நிற்க அவரோ சிரிப்புடன்

  

”வாம்மா உனக்காக அங்க கோவலன் காத்திருக்கான் வா” என அழைக்க அவள் அதைக்கேட்டு இன்னும் நாணம் கொண்டாள்.

  

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.