(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

கோவலனைப்பார்க்க அவன் புரிந்துக் கொண்டு தலைதாழ்த்தினான். கண்ணகியும் அதை கவனித்துவிட்டு

  

”சரி சரி நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க, நான் டாக்டரை போய் பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவள் வெளியே சென்றுவிட ஈஸ்வரமூர்த்தியோ கோவலனிடம்

  

”பயந்துட்டியா இல்லை ஏமாந்துட்டியா”

  

”தாத்தா“

  

”இல்லைப்பா நான் செத்துடுவேன்னு நினைச்சி பயந்துட்டியா இல்லை இன்னும் நான் சாகலையேன்னு நினைச்சி ஏமாந்துட்டியான்னு கேட்டேன்”

  

”தாத்தா இப்படியெல்லாம் பேசி என்னை வதைக்காதீங்க கஷ்டமாயிருக்கு”

  

”நீதான் என்னை கஷ்டப்படுத்தற”

  

”டாக்டர் உங்களை ஓய்வு எடுக்க சொன்னாரு எதை பத்தியும் யோசிக்காம நீங்க நிம்மதியா இருந்தாதான் உங்க ஆரோக்கியம் நல்லபடியா இருக்கும்”

  

”எனக்கு என்ன தேவைன்னு உனக்கு நல்லாவே தெரியும், நான் சொன்னதை நீ செய்தா நான் நிம்மதியா இருப்பேன் என்ன சொல்ற”

  

”ப்ச் தாத்தா அதையும் இதையும் ஏன் முடிச்சிப் போடறீங்க விடுங்களேன்”

  

”அப்படி விடமுடியாது கோவலா, பாரு திடுதிப்புன்னு நான் இப்படி படுத்தபடுக்கையாயிட்டேன் இதை நானே எதிர்பார்க்கலை, உனக்கு ஒரு நல்லது செய்து பார்க்கனும்னு ஆசை அதுக்குள்ள என் உசுரு போயிடுமோன்னு பயமா இருக்கு கோவலா”

  

”அப்படி சொல்லாதீங்க தாத்தா உங்களுக்கு எதுவும் ஆகாது நீங்க 100 வருஷம் வாழ்வீங்க”

  

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.