(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

இன்னும் 2 நாட்களில் திருமணம் என்ற நிலையில் கல்லூரிக்கும் இந்த திருமண செய்தியை ஈஸ்வரமூர்த்தியே அறிவித்தார், அதில் மாணவர்கள் கூட மகிழ்ந்தார்கள். கண்டிப்பாக கல்யாணத்திற்கு மாணவர்கள் வருவார்கள் என அறிந்த ஈஸ்வரமூர்த்தியும் பெரிய மண்டபத்தையே பார்த்திருந்தார், 5000 பேர் வரும் அளவு இருந்தது அந்த மண்டபம்.

  

கண்ணகியின் வீட்டிற்கு வந்தார் ஈஸ்வரமூர்த்தி அவளோ கலக்கமாக இருந்தாள்

  

”ஏன்மா உன் முகம் வாடியிருக்கு என்ன விசயம்”

  

”எனக்குன்னு யாருமில்லை சீர் செய்யவும் என்கிட்ட பணம் இல்லை”

  

”உன்கிட்ட நான் எதையும் எதிர்ப்பார்க்கலை உன்னோட தங்கமான குணமே போதும் நீ கையாட்டிக்கிட்டு வா”

  

”ஆனாலும்“

  

”எதுவும் பேசக்கூடாது உனக்காக துணிமணி நகைகள் எல்லாம் கொண்டு வந்திருக்கேன் வாங்கிக்க”

  

”ப்ச் இல்லை இதை எப்படி நான் வாங்கறது அது முறையா இருக்காதே”

  

”எனக்காக வாங்கிக்க நான் கொடுத்தா வேணாம்பியா”

  

”இல்லை எனக்கு தயக்கமா இருக்கு சார்” என்றாள்

  

”இன்னும் என்ன என்னை  சார் சார்ன்னு கூப்பிடற தாத்தான்னு அன்பா கூப்பிடும்மா” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்து

  

”தாத்தா” என அழைக்க

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.