(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”இன்னிக்கு முழுக்க இங்கயே அப்சர்வேஷன்ல இருக்கட்டும், நாளைக்கு சில டெஸ்ட்டுக்குள் எடுத்த பின்னாடி டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்”

  

”அவரை பார்க்கலாமா”

  

”தாராளமா” என சொல்ல இவ்விருவரும் அவரை தேடிச் சென்றார்கள்.

  

நோயாளி போல படுத்துக்கிடந்தவரை காணவே கோவலனால் இயலவில்லை

  

”தாத்தா” என அழுதபடி நிற்க அவனின் அழுகையைக்கண்டு கண்ணகி மனம் இரங்கினாள்.

  

”சார் சார்” என அவளும் அழைக்க ஈஸ்வரமூர்த்தி கண்கள் திறந்துப் பார்த்தார். கண்ணகியும் கோவலனும் தன் முன் இருக்கவே அவருக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது

  

”உங்களை ஒண்ணா சேர்த்து வைச்சி பார்க்காம நான் போய் சேர்ந்துடுவேன்னு நினைச்சு பயந்தேன், நல்லவேளை உங்களை நான் பார்த்துட்டேன் இனி என் உயிர் போனாலும் எனக்கு கவலையில்லை” என சொல்ல கண்ணகியோ

  

”இப்படியெல்லாம் பேசாதீங்க சார் எங்க எல்லாருக்கும் நீங்க வேணும்”

  

”என் உடம்பு மோசமான நிலைமையில இருக்கு, என்னால யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை”

  

”அப்படி சொல்லாதீங்க சார் உங்க துணை இருந்ததாலதான் என்னால வெற்றி பெற முடிஞ்சது என்னோட வெற்றிக்கு நீங்களும் ஒரு காரணம்தான் சார்”

  

”என்ன இருந்து என்ன எனக்கு நிம்மதியில்லையே“

  

”ஏன் சார் என்னாச்சி எதுவாயிருந்தாலும் சொல்லுங்க சார்” என கேட்க அவரோ

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.