(Reading time: 26 - 52 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”சின்னய்யா இவனை போய் ஏன் பகைச்சிக்கிட்டீங்க, இவன் பொல்லாதவனாச்சே வஞ்சம் வைச்சி பழி தீர்ப்பான்”

  

”அவன் கெடக்கிறான் விட்டுத்தள்ளுங்க, முதல்ல நான் சொன்னதை செய்ங்க அந்த ஃபைல்களை நான் சரிபார்த்து கையெழுத்து போடறேன், நீங்க போங்க” என சொல்ல குமரப்பனோ எழுந்து நின்றதும் அகத்தியனோ

  

”அப்புறம் ஒரு விசயம் எனக்கு புது கார் வேணும்”

  

”சரிங்க சின்னய்யா”

  

”ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்க மாட்டீங்களா”

  

”உங்களை கேள்வி கேட்க நான் யாரு சின்னய்யா”

  

”இந்த தாழ்வு மனப்பான்மைதான் வேணாம்ங்கறது, இப்படி நீங்க ஒதுங்கி போனா நாளைக்கு நான் ஏதாவது தப்பு செய்தா அதை யாரு தட்டிக் கேட்பா” என சொல்ல குமரப்பன் மென்மையாகச் சிரித்து

  

”அப்பேற்பட்ட குடும்பத்துக்கு இப்படியொரு வாரிசு பால்ல கூட கலப்படம் இருக்கலாம் ஆனா நீங்க சொக்கத்தங்கம்யா”

  

”இந்த புகழ்ச்சிக்கு மயங்கறவன் நான் கிடையாது”

  

”தெரியும் சின்னய்யா எப்படிதான் அந்த குடும்பத்துல பிறந்து இப்படி வித்தியாசமா யோசிக்கறீங்களோ, அந்த குடும்ப வாடையே உங்ககிட்ட இல்லையே”

  

என சொல்ல அகத்தியன் மென்மையாக சிரித்துவிட்டு

  

”அடிப்பட்டவனுக்கு வேண்டிய மருத்துவ செலவு நாமதான் செய்யனும், காயம் சின்னதா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.