”பொய் சுத்த பொய்“ என்றாள் கோபமாக
”உண்மைதான் இப்ப வேணா நீ போய் மாதவி வீட்ல பாரு அங்க கோவலன் இருப்பான்”
”இல்லை அவங்களுக்குள்ள காதல்லாம் இல்லை ஏதோ மன ஆறுதலுக்காக அங்க போயிருப்பாரு”
”அய்யோ பாவம் நீ ஏன் இவ்ளோ வெள்ளந்தியா இருக்க கண்ணகி, உனக்கு இன்னும் சில உண்மைகள் தெரியலை போல, மாதவி கோவலனோட கம்பெனியில வேலை பார்த்தப்பவே கோவலன் மாதவியை விரும்பியிருக்கான், அவனோட காதல் அவளுக்கு முன்னாடியே தெரியும், தெரிஞ்சிதான் அவள் கம்பெனியை விட்டு கல்லூரிக்கு வந்தா, கல்லூரிக்கு வந்தது உனக்காகன்னு நினைச்சியா அதான் இல்லை, அவள் வேலையை விட்டு கல்லூரிக்கு பாடம் எடுக்க வந்தது கோவலனுக்காக
அவனுக்கு காதல் பாடம் எடுக்க வந்தா, எல்லாம் நல்லா போயிக்கிட்டிருந்த சமயம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில உனக்கும் கோவலனுக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடந்தது, அப்ப கூட கோவலன் விடலையே அவளை தேடிப் போய் கெஞ்சி கூத்தாடியிருக்கான், அவளால என்ன செய்ய முடியும் பாவம், தன் தாத்தாவோட வற்புறுத்தலுக்காக பேருக்கு உன்னை கல்யாணம் செய்துக்கிட்டவன், அன்னிக்கு நைட்டே தன் காதலி மாதவிகிட்ட போய் சேர்ந்துட்டான், அவன் பேசினதை நான் ஒளிஞ்சி நின்னு கேட்டேன், அப்பப்பா என்ன காதல் என்ன காதல் தெய்வீக காதல் அது, கோவலன் மடிபிச்சை கேட்கற மாதிரி காதல் பிச்சை கேட்க மாதவியும் சரின்னு சொல்லி அவனை ஏத்துக்கிட்டா, ம்ம் உன் உயிர் தோழியே உனக்கு துரோகம் செய்துட்டா”
”இல்லை மாதவி அப்படி செய்ய மாட்ட”
”அப்படியா சரிம்மா அவள் உனக்கு உண்மையான தோழியா இருந்திருந்தா என்ன செய்திருக்கனும் கோவலன் அவள் வீட்டுக்கு போன அடுத்த நொடியே உனக்கு தகவல் சொல்லியிருக்கனும் ஆனா சொல்லலை, ஏன் சரி உன்னை தேடி ஏன் வரலை அவளே தெளிவா இருக்கா நீ ஏன் குழம்பற கண்ணகி”