”நீங்க என்னை காதலிச்சிருக்கலாம் ஆனா நான் உங்களை காதலிக்கலை புரிஞ்சிக்குங்க கோவலன், தயவு செஞ்சி கிளம்புங்க கண்ணகி பாவம் அவளுக்கு துரோகம் இழைக்காதீங்க”
”அப்போ நான் பாவம் இல்லையா மாதவி, காதலுக்காக அவனவன் உசுரையே விடறான் நான் என்ன செய்தேன் துரோகம் தானே பரவாயில்லை, கண்ணகி வாழ்க்கையை பார்த்துக்க தாத்தா இருக்காரு ஆனா என்னைப் பார்த்துக்க யார் இருக்கா நீதான் இருக்க”
”ப்ச் அய்யோ எப்படி சொன்னா உங்களுக்குப் புரியும்னு தெரியலையே, நீங்க இல்லாம வீட்ல உங்களை நினைச்சி எல்லாரும் கவலையா இருப்பாங்க அதுக்காகவாவது போய் பாருங்க”
”முடியாது இப்ப நான் போனா மறுபடியும் அந்த கல்யாண வாழ்க்கைங்கற புதைகுழியில நான் சிக்கிடுவேன், திரும்ப என்னால வெளிய வர முடியாது தாத்தாவுக்கென்ன ப்ளாக்மெயில் செஞ்சி கல்யாணத்தை நடத்தின மாதிரி இன்னொரு ப்ளாக்மெயில் செஞ்சி என்னை கண்ணகியோட சேர்ந்து வாழ சொல்வாரு, சத்தியமா அது என்னால முடியாது”
”அய்யோ உங்களால நானும் இப்ப எல்லாருக்கும் துரோகியாயிட்டேனே முக்கியமா கண்ணகிக்கு நான் பெரிய தீங்கு இழைச்சிட்டேன்”
”நீ ஏன் கலங்கற அவளுக்கு தீங்கு செய்தது நான்தானே“
”அதான் இல்லை கண்ணகி யாரோ இல்லை என்னோட உயிர் தோழி, நானும் அவளும்தான் இந்த வீட்ல பல வருஷங்களா தங்கியிருந்தோம்” என சொல்ல அதைக்கேட்டு கோவலன் அரண்டான்
”நீ பொய் சொல்ற இதை நான் நம்பமாட்டேன் என்னை இங்கிருந்து அனுப்ப திட்டம் போடறியா முடியாது நான் போக மாட்டேன்”
”அய்யோ நான் சொல்றது உண்மை இருங்க வரேன்” என சொல்லி உள் அறைக்குச் சென்று அங்கு அவளும் கண்ணகியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை கொண்டு வந்து அவனிடம் தந்தாள்