(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

மாறிடுவா, ஊரே அவளை நேர்ந்து விடறப்ப நம்மளை அவளால அடிக்க முடியாது, நம்மகிட்ட அவள் பணிஞ்சிதான் போகனும் வேறவழியில்லை“

  

”இதுக்கு கீழவீதியாளுங்க விடுவாங்களா”

  

”நாச்சியா மேல பழிவிழுந்தாலே அவனுங்க ஒதுங்கிடுவானுங்க, அவனுங்களே நமக்கு நிகரா வாழ்ந்து காட்டனும்னு இருக்கானுங்க, இப்படி பழி விழுந்தவளுக்காக எவனும் வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வரமாட்டானுங்க, இன்னியோட அவள் வாழ்க்கையே முடிஞ்சது” என சொல்லி கொடூரமாக சிரிக்க சுற்றியிருந்த அனைத்து ஆண்களும் கலகலவெனச் சிரித்தார்கள். அந்த நேரம் பார்த்து நாச்சியா சைக்கிளில் அவ்வழியே செல்ல அவளைக் கண்ட ஒவ்வொரு ஆணும் வெறிபிடித்தவர்கள் போல பார்த்து எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

  

நாச்சியா செல்லும் வழியில் எதிர்பாராத திருப்பத்தில் இருந்து சட்டென திரும்பிய கார் ஒன்று அவளை இடிக்க வர அதில் இருந்து அவள் தப்பிக்க முயன்று முடியாமல் சைக்கிளுடன் தரையில் விழுந்தாள். உடனே காரும் நின்றது. கார் டிரைவர் கோபத்துடன் இறங்கி வந்து நாச்சியாவை கண்டு எரிந்து விழுந்தான்

  

”ஏய் அறிவிருக்கா உனக்கு நீ சாகறதுக்கு எங்க வண்டிதான் கிடைச்சதா போய் கிணத்துல ஆத்துல விழவேண்டியதுதானே” என சொல்ல அவளோ மிகுந்த சிரமத்துடன் எழுந்து நின்று டிரைவரை எதிர்கொண்டாள்

  

”நான் ஒண்ணும் சாகறதுக்காக வரலை, நீதான் கண்ணுமண்ணு தெரியாம காரை ஓட்டி மக்களை சாகடிக்கப் பார்க்கற”

  

”என்ன திமிரா”

  

”பின்ன உனக்கெல்லாம் யாரு லைசன்ஸ் தந்தது, காரை இப்படிதான் ஓட்டுவாங்களா என்ன ஒழுங்கா சாலை விதிகளை பின்பற்றாம ஓட்டி வந்து என்னை மோதிட்டு பேச்சைப் பாரு”

  

”கொழுப்பா என்னையே அவமானப்படுத்தறியா எனக்கு வண்டி ஓட்டறதுல 5 வருஷ அனுபவம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.