”அவசியம் அவளை கூப்பிடனும்” என சொல்ல வேங்கையனோ
”அதுக்கு முன்னாடி எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆயிடும் எங்க கல்யாணத்துக்கு அவசியம் நீங்க வரனும்” என சொல்ல அதைக்கேட்டு அவர்கள் கலகலவென சிரித்தார்கள்
கோர்ட் விசயம் வீரசிங்கம் காதுவரை எட்டிவிட்டது, அந்த விசயத்தை தன் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்
”எப்படியோ அவன் வாழ்க்கையில இனிமேலயாவது நல்லது நடந்தா சரி” என சொல்ல அதற்கு மங்களமோ
”சின்ன மருமகளே இல்லை இனி அவன் வாழ்க்கையில நல்லது நடந்தா என்ன நடக்காம போனா என்ன”
”6 மாசம் ஆச்சி இன்னுமா உனக்கு உன் மகன் மேல இருந்த கோபம் போகலை”
”போகலைங்க போகவும் போகாது போதுமா”
“அவனே உன்னை தேடி வருவான் பாரு”
”ஆமா இத்தனை நாளும் வரலை இனிமேலயா வரப்போறான்” என சொல்லி முடிக்க அம்மா என அழைத்தபடியே வந்தான் வேங்கையன்.
அத்தனை நாட்கள் மகனின் குரல் கேளாமல் இருந்த தாய்க்கு இப்போது மகிழ்ச்சி பொங்கியது. வீரசிங்கமோ வேங்கையனைப் பார்த்தார், அவனோ வாசலுக்கு அந்த பக்கமே நின்றிருந்தான்
”என்னடா வாசலுக்கு காவல் நிக்கற போல, நில்லு நில்லு” என சொல்ல அவனோ சட்டென உள்ளே நுழைந்தான்
”நான் என்ன காவல்காரனா காவல் காக்க, நான் அம்மாவை பார்க்க வந்தேன்”