”புரியலையே”
”நானும் உங்களோட வரேன்பா அவங்க எப்படி நடந்துக்கறாங்கன்னு கவனிக்கிறேன்”
”உன் மனசு போலவே நான் மாப்பிள்ளையை பார்த்திருக்கேன், ஒரு குறையும் உன்னால சொல்லிட முடியாது” என சொல்லிக் கொண்டே மகளை அழைத்துக் கொண்டு சென்றார்
வீட்டிற்கு வெளியே அவர் பார்த்து வைத்த மாப்பிள்ளை பாஸ்கரன் தன் தாய் தந்தையுடன் வந்திறங்கினான்.
மகேந்திரன் தன் மனைவி மகளுடன் சென்று பார்த்தார்கள், மஹதியும் பாஸ்கரனை பார்த்தாள், வேங்கையன் அளவு இல்லை என்றாலும் சரியான வரனைத்தான் தந்தை பார்த்திருக்கிறார் என நினைத்தாள், பாஸ்கரனும் மஹதி நிற்பதைக்கண்டு மகிழ்ந்தான். அவனின் தந்தையோ
”என்னடா இது பொண்ணு வெளிய வந்து நிக்குது”
”நமக்காகதான் வந்திருக்கா”
”இது என்னடா சம்பிரதாயத்தையே மாத்திட்டாங்க“
”எது எப்படி நடந்தா என்ன, எனக்கு அவளை பிடிச்சிருக்கு, கட்டினா நான் அவளைதான் கட்டிப்பேன் இல்லைன்னா சாமியாராயிடுவேன்” என மிரட்ட அவர் அமைதியானார்.
மகேந்திரன் கைகூப்பி வணக்கம் சொல்லிக் கொண்டே வந்தவர்களை வரவேற்க அவர்களும் சிரித்த முகத்துடனே வர அந்நேரம் இன்னொரு காரும் வந்து நின்றது.
அந்த காரைக்கண்டதும் அனைவருமே குழம்பினார்கள்.
காரில் இருந்து வீரசிங்கம் வேங்கையன் மங்களம் இறங்கி நிற்கவும் மஹதிக்கு உலகமே சுழலவில்லை, நின்றுவிட்டது போல உணர்ந்தாள், மகேந்திரனுக்கும் சாந்திக்கும் கூட