பொறுப்பு இன்னிக்கு இல்லைன்னாலும் என்னிக்காவது ஒரு நாள் மூர்த்தி மனசு மாறி இவளை தேடி வருவான், அதுவரை அவனை தேடி யாரும் போகாம இருக்கறது ரொம்ப நல்லது, அவனே வந்தாதான் ஜானகியை நல்லபடியா பார்த்துக்குவான்”
”அப்ப நீங்க எங்க போறீங்க அப்பா அம்மாகிட்டயா”
”அப்பா அம்மா இல்லாத வீட்ல எனக்கு இருக்க பிடிக்கலை, அதனால அந்த வீட்டை பூட்டி ஆளுங்களை காவலுக்கு நிக்க வைச்சிட்டேன், அப்பா அம்மாகிட்ட போனா அவங்க என்கிட்ட பேசமாட்டாங்க, அவங்க கோபம் குறையட்டும், அதுவரைக்கும் நான் தோப்பு வீட்ல இருக்கேன் ஒரு நாள் எல்லாம் மாறும் எல்லாரும் மாறுவாங்க, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என சொல்லிவிட்டு கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு ஜானகியை அழுத்தமான ஒரு பார்வை பார்த்துவிட்டு அத்துடன் அவ்விடம் விட்டு தான் சொன்னது போலவே தோப்பு வீட்டில் தஞ்சமடைந்தான்.
இவ்விசயம் ஊரெங்கும் தீயாய் பரவியது. அந்த குடும்பமே பிரிந்தது ஜானகியால் அல்ல மூர்த்திதான் காரணம் என ஊர்க்காரர்கள் மூர்த்6தியை குறை கூறலானார்கள். அவன் எங்கு சென்றாலும் மதிப்பில்லை, மரியாதையில்லை, வேலை செய்யும் இடத்தில் கூட அவனுக்கு மதிப்பு குறைந்துவிட்டது அவரவர்கள் அவனை இளப்பமாக பார்க்கலானார்கள்.
அவனுக்கு வேலைக்குச் செல்லவே பிடிக்கவில்லை, ஊரார் அவனை மட்டுமில்லை அவனது பெற்றோரையும்தான் இளப்பமாக பார்த்து பேசி குறை கூற அவர்களுக்கு தன் மகன் மீதே கோபம் வந்தது.
மூர்த்தியிருந்தால் தங்களுக்கு என இருக்கும் கௌரவம் கூட போய்விடும் என நினைத்தவர்கள் அவனை வீட்டை விட்டு விரட்ட அவனுக்கு கஷ்டமாகிப் போனது, சொந்த ஊரிலேயே வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு வேலைக்கு சென்று வந்தான்.
மங்களமும் வீரசிங்கமும் பண்ணை வீட்டில் தங்கினாலும் மனம் முழுக்க வேங்கையனை பற்றியும் மஹதியை பற்றியுமே சிந்தித்தார்கள், வேங்கையன் தோப்பு வீட்டுக்கு வந்தது, ஜானகி தன் தாய் வீட்டிற்கு சென்றது என அனைத்துமே அவர்களுக்கும் தெரியும், அதற்காக ஜானகி சென்றாளே என தன் மகனிடம் செல்லவில்லை, அவன் மனம் மாற வேண்டும்,