”ஆமாம்”
”எப்படி உன்னால முடியுது, இத்தனை நாளும் மூர்த்தியை நினைச்சிக்கிட்டு அவனோட வாழறதை நினைச்சி கற்பனை செய்துக்கிட்டு இருந்த, இப்ப அவன் போனதும் என்கூட வாழ ஆசைப்படற முடியுமா உன்னால, அவனை நீ விட்டாலும் அவனோட நினைவுகள் இன்னும் உன் மனசுல இருக்கும், உன்னை நான் தொடறப்ப உனக்கு வெறுப்புதான் வரும்” என சொல்ல அவளோ மறுத்தாள்
”இல்லை அப்படியெல்லாம் இல்லை எனக்கு வெறுப்பு வராது”
“வராதா”
”ஆமாம் வராது”
”அப்ப நான் உன்னை கட்டிப்பிடிக்கவா” என கேட்க சட்டென அவளால் பதில் சொல்ல இயலவில்லை, குழம்பினாள், திணறினாள். அவனோ அவளை நெருங்க அவளோ பின்னால் நடந்தாள்
”ஏன் தள்ளிப் போற”
”அது வந்து இந்த நேரத்திலயா”
”ஏன் இந்த நேரத்துக்கு என்ன, நீ என் பொண்டாட்டி, நான் உன் புருஷன், வீட்ல வேற யாரும் இல்லை நமக்கு நடுவில பகலா இருந்தா என்ன இரவா இருந்தா என்ன எல்லாம் ஒண்ணுதான்” என சொல்லியபடியே அவளின் தோளில் கையை வைத்து தன்புறம் இழுக்க அதற்கே அவள் அவனை தள்ளிவிட்டு விலகி நின்றாள்.
ஏதோ தன் மீது தீ பட்டது போல துடித்துப் போக அதைக்கண்டு அவன் மென்மையாக சிரித்து
”இப்பவாவது புரியுதா உனக்கு, உன்னால என்கூட வாழமுடியாது”