(Reading time: 27 - 54 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”தெரியும்பா அவர் ஜானகியோட சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருப்பாரு”

  

”பாரு அவனே தன் வாழ்க்கையை பார்த்துக்கிட்டான், நீயும் உன் வாழ்க்கையை பார்க்கலாம்ல”

  

”இப்ப என்னை என்னதான்பா செய்ய சொல்றீங்க”

  

”உன்னை இப்படியே விட்டா வேலைக்காகாது, பேசாம நான் உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கிறேன் கல்யாணம் செய்துக்கறியா” என தயங்கி தயங்கியே கேட்டார், அவள் முடியாது என்பாள் அழுவாள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே

  

”சரிப்பா” என்றாள்

  

”என்னம்மா சொல்ற உனக்கு விருப்பமா”

  

”உங்க விருப்பம்தான் என் விருப்பமும்“

  

”இது தப்பு, எங்களுக்காக நீ உன் வாழ்க்கையை அமைச்சிக்க வேணாம், உனக்கு வேங்கையன்தான் வேணும்னா சொல்லு நானே போய் அவன்கிட்ட பேசி” என சொல்லி முடிக்கும் முன் அவள் நிப்பாட்டினாள்

  

”வேணாம்பா மறுபடியும் ஜானகிக்கு துரோகம் இழைக்க என்னால முடியாது, அவளே திருந்தி மூர்த்தியை விட்டுட்டு அவர்கூட சேர்ந்திருக்கா, அவங்க வாழ்க்கை இப்பதான் ஒண்ணு சேர்ந்திருக்கு, மறுபடியும் என்னால அது கெடனுமா வேணாம்பா”

  

”மனசில்லாம நீ கல்யாணம் செய்துக்க வேணாம் மஹதி“

  

”இல்லைப்பா நான் தெளிவா இருக்கேன், கல்யாணம் ஆனா என் வாழ்க்கையில மாற்றம் வரும்னா அவசியம், நான் கல்யாணம் செய்துக்கறேன்பா என்னை நினைச்சி நீங்களும் அம்மாவும் கஷ்டப்படறதை என்னால பார்க்க முடியலைப்பா”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.