(Reading time: 27 - 54 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”வா”

  

”அப்பா அம்மா” என இழுக்க அவன் பார்த்தான் குபேரனும் வேணியும் கோபத்துடன் நிற்பதைக்கண்டு

  

”உங்களை விட மலையளவு கோபம் என்மேலயே எனக்கிருக்கு அதை காட்ட முடியலை இதுல நீங்களும் கோபமா இருந்தா எப்படி“

  

”மாப்பிள்ளை நாங்க உங்க மேல கோபமா இல்லை”

  

”மாப்பிள்ளையா அதெல்லாம் முடிஞ்சி போச்சி, இனி நான் உங்களுக்கு வீரசிங்கத்தோட மகன் வேங்கையன் மட்டும்தான், முன்ன போலவே வேங்கைன்னு கூப்பிடுங்க மாமா” என சொல்ல அவர் புரிந்துக் கொண்டார்

  

”கேள்விப்பட்டேன் உன் அப்பா அம்மா கோச்சிக்கிட்டு வீட்டை விட்டு போயிட்டாங்களாமே”

  

”ஆமாம் அவங்களோட கோபம் என் மேலதான், சின்ன மருமகள் வீட்டை விட்டு போனதை அம்மாவால தாங்கிக்க முடியலை ஜானகியை ஏத்துக்க அவங்களுக்கு பிடிக்கலை, ஜானகிக்கும் என்கூட வாழறது நரகம்தான்”

  

”இனியுமா அதான் மூர்த்தியை அவள் விட்டுட்டாளே” என கேள்வியுடன் கேட்டார் வேணி

  

”அவள் விட்டா ஆனா அவளோட மனசு விடலையே, நான் கிட்டப்போனா எட்டப்போறவளோட எப்படி வாழறது அத்தை புரிஞ்சிக்குங்க” என சொல்ல குபேரன் வேணி இருவருமே வேங்கையன் சொன்னதை நன்றாக புரிந்துக் கொண்டார்.

  

“இப்ப நாங்க என்ன செய்யனும் சொல்லு அப்படியே செய்றோம்”

  

”ஒண்ணுமில்லை உங்க பொண்ணை நான் கூட்டிட்டு வந்துட்டேன், கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இங்கிருந்து வந்தாளோ அதே போல கசங்காம வந்து சேர்ந்துட்டா, இனி இவள் உங்க

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.