”மனசு முக்கியம், அதை மதிச்சோம், பிரிஞ்சிருந்ததால நானும் பலவிசயங்களை கத்துக்கிட்டேன் புரிஞ்சிக்கிட்டேன், எனக்கு என்ன தேவைன்னும் தெரிஞ்சிக்கிட்டோம், அதே போல மூர்த்தியும் ஜானகியை ஏத்துக்கிட்டு அவள்கூட வாழ முடிவு எடுத்துட்டான், அதுக்கு தடையா இருக்கறது நான்தானே, அதனால நானே கேட்கறேன் எனக்கு டைவர்ஸ் கொடுங்க”
”போன முறை வாய்ப்பு கேட்டீங்க இந்த முறை டைவர்ஸ் கேட்கறீங்க யோசிச்சிதான் முடிவு எடுத்திருக்கீங்களா”
”ஆமாம்” என சொல்ல ஜட்ஜம்மா ஜானகியைப் பார்த்து
”நீ என்னம்மா சொல்ற”
”சொல்ல என்ன இருக்கும்மா, அன்னிக்கு சொன்னதுதான் நான் மாறவேயில்லை, எனக்கு மூர்த்தி மாமாதான் வேணும் அவரும் என்னை ஏத்துக்கிட்டாரு, வர்ற முகூர்த்தத்தில எனக்கும் அவருக்கும் கல்யாணம், நீங்க சீக்கிரமா எனக்கு டைவர்ஸ் கொடுத்திட்டீங்கன்னா நான் கல்யாண வேலைகளை பார்ப்பேன்” என சொல்ல ஜட்ஜம்மா வேங்கையனிடம்
”உனக்கு இதுல சம்மதமா யாரும் உன்னை மிரட்டலையே இல்லை வெளிய சொல்ல பயப்படறியா“
”சே சே அப்படி எதுவும் இல்லைங்கம்மா, ஜானகியை வேணும்னு சொன்ன நானே இப்ப வேணாம்னு முடிவு எடுத்துட்டேன், அதுக்கு காரணம் நான் ஜானகியை புரிஞ்சிக்கிட்டதுதான், அவளோட காதலை நான் புரிஞ்சிக்கிட்டேன், அவளோட காதலை மூர்த்தியும் ஏத்துக்கிட்டான், இப்ப அவங்க ஒண்ணு சேர்ந்துட்டாங்க, என்கூட ஜானகி வாழ்ந்தா எங்க வாழ்க்கையே நரகமாயிடும், அதுவே மூர்த்தியோட அவள் வாழ்ந்தா அவள் வாழ்க்கை சொர்க்கமாயிடும்“
”எல்லாம் சரி ஜானகி வாழ்க்கை மூர்த்தியோடன்னு ஆயிடுச்சி, அப்ப உங்க வாழ்க்கை என்னாகிறது, உங்களைப் பத்தி யோசிச்சிட்டீங்களா”