(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

ப்ரியம்வதாவிற்கு வினாயக்கின் சைபோர்க் மேல தனி பாசம் இல்லை. ஆனால் அந்த சைபோர்க் பற்றி பேசும் போது அவன் கண்களில் மின்னும் கனவும், ஆர்வமும் பார்க்க பிடித்திருந்தது.

  

அதனாலேயே தனக்கு தெரிந்த விபரங்களை வேண்டுமென்றே மீண்டும் அவனிடம் கேட்டாள்!

   

"சைபோர்க்ன்னா ரோபோ தானே வினாயக்???"

   

வினாயக் வேக வேகமாக மறுப்பாக தலையை அசைத்தான்!

   

"சைபோர்க் என்பது சாதாரண ரோபோ மாதிரி கிடையாது ப்ரியம்வதா! மனுஷங்களோட பையாலஜி கூடவே தொழில்நுட்பம் கலந்து உருவாகுற ஒரு ரொம்ப ஹை ஃபை பர்சனாலிட்டி! அதை ரோபோன்னு சொல்றது தப்பு!"

   

அவள் எதிர்பார்த்ததுப் போலவே கண்கள் மின்ன அவன் அவனின் சைபோர்க் பற்றி பேச, அவன் சொன்னதை கவனிக்காமல், அவனையே ரசித்துக் கொண்டிருந்தாள் ப்ரியம்வதா!

   

எப்போது தான் இந்த இயந்திர மனிதன் ஆசையை விட்டு விட்டு உயிருள்ள அவளை கண் திறந்துப் பார்ப்பானோ!

  

வினாயக்கும், ப்ரியம்வதாவும் இருந்த கான்ஃபரன்ஸ் அறைக்குள் மற்றவர்களும் வந்து காலியாக இருந்த இருக்கைகளில் அமர்ந்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் கார்பொரேஷன் எனும் தனியார் நிறுவனத்தில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். ப்ரியம்வதா அந்த கம்பெனியின் ப்ரொடக்ஷன் துறையின் தலைமை பொறுப்பில் இருக்கிறாள். வினாயக் ரோபோட்டிக்ஸ் R&D துறையின் தலைவனாக இருப்பவன்.

  

இருவருடைய அலுவலகங்களும் வெவ்வேறு இடங்களில் இருந்தது. அதனால் இதுப்போன்ற மீட்டிங்குகளில் மட்டும் வினாயக்கும் ப்ரியம்வதாவும் சந்தித்துக் கொள்வார்கள்.

  

கம்பெனியின் எம்.டி சந்திரமௌலி அறைக்குள் வந்த உடன் அனைவரும் மரியாதை நிமித்தம்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.