Page 12 of 21
”நீங்க மாதவியோட வருவீங்க எதுக்கு நாம இங்க இருக்கனும்னு கிளம்பறேன்”
”உள்ள போ”
”ஏன்”
”போங்கறேன்ல“
”மாதவி கிடைக்கலையா”
”யார் சொன்னது நான் மாதவியை தேடிப் போனேன்னு”
”வேற எங்க போனீங்க”
”மன நிம்மதிக்காக எனக்கு பிடிச்ச இடத்துக்கு போனேன்”
”அதான் எங்க”
”வேற எங்க ஊட்டிக்குதான் அங்க எனக்குன்னு ஒரு எஸ்டேட் இருக்கு சரி அதைபோய் பார்த்தேன் எஸ்டேட் பங்களால தங்கி நிம்மதியா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வந்தேன்”
”ஊட்டியா இதுவரைக்கும் நான் அங்க போனதில்லை ஏன் என்னை கூட்டிட்டுப் போகலை“
”அப்படியே நான் உன்னை வான்னு கூப்பிட்டதும் உடனே பெட்டி தூக்கிட்டு வந்துடுவியோ“
என சொல்ல அவளோ கோபமாக காரின் முன் பக்கம் ஏறி அமர்ந்துக் கொள்ள அவனோ அவளை வியப்புடன் பார்த்து
”இதுக்கு என்ன அர்த்தம்“