செல்ல அவன் செல்வதைக் கண்ட அங்கமுத்துவோ
”சே தலையெழுத்து இவன் யார் பேச்சையும் கேட்காம அடமா இருக்கானே, இனி என்னென்ன நடக்குமோ” என புலம்பிக் கொண்டே தன் மகளை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.
மீதியிருந்தவர்களின் முன் வந்து மிடுக்காக நின்றாள் நாச்சியா
”அச்சோ பாவம் என்னத்த புள்ளையை வளர்த்திருக்கீங்க, உங்க குணத்தில ஒரு சதவீதம் கூட அவன்கிட்ட இல்லையே, அதுசரி அவன் இந்த வீட்டு பிள்ளையா இருந்திருந்தா ஒருவேளை உங்களை போல ஆளாகியிருப்பானோ என்னவோ” என சொல்ல தாத்தாவோ
”என்ன உளர்ற அவன் இந்த வீட்டு வாரிசு”
”பொய் உங்களால வாரிசா ஆக்கப்பட்டவன், அவன் எந்த வீட்டைச் சார்ந்தவன்னு எனக்குத் தெரியாதா, எது எப்படியோ அவனே தன்னோட சொந்த அப்பா அம்மான்னு தெரியாம அவங்களை கூட்டிட்டு வரப்போறான், வரட்டும், அப்பா அம்மா மகன்னு அவங்க வாழ்ற பொன்னான வாழ்க்கையை இனி நீங்க கண்குளிர பார்க்கனும் வேற வழியில்லை“
”அதிகபிரசங்கித்தனமா பேசி வைக்காத, அவனோட அப்பா என் அண்ணன் பொன்முடிதான்” என கலாவதி சொல்ல நாச்சியாவோ மென்மையாகச் சிரித்து
”அப்படியா ம்ம் ஆமா உங்க அண்ணி பிரசவத்தப்ப நீங்க எங்க இருந்தீங்க”
”எங்கயா இங்கதான் இருந்தேன், என் அண்ணி கூடவே இருந்தேன்“
”அப்படியிருந்துமா இப்படி பேசறீங்க”
”இதப்பாரு என் அண்ணியை இழுக்காத, அவங்க பாவம் ஒவ்வொரு முறையும் பெண்குழந்தை பிறந்து இறக்கும் போது எப்படி துடிச்சிப் போயிட்டாங்க தெரியுமா, மொத்தம் 5 பெண் குழந்தைகள் யார் செய்த பாவமோ பிறந்த உடனே இறந்துடுச்சி”