”நான் வேணா வைத்தியம் பார்க்கலாமா“
“வேணாம்பா கல்யாண டென்ஷன்ல அடிக்கடி தலை வலி வருது அவ்ளோதான் பெரிசா எதுவும் இல்லை”
”இதுக்குதான் நான் இவங்களை கூட்டிட்டு வந்தேன், கவலையேப்படாதீங்க இவங்க வீட்டு கல்யாணம் போல எல்லாத்தையும் எடுத்து செய்வாங்க” என சொல்ல அவரோ சோர்ந்துப் போய் சரிசரியென தலையாட்டிவிட்டு தன் அறைக்குச் சென்றார்.
பாஸ்கரனோ வந்தவர்களிடம் நன்றி கூறிவிட்டு சென்றான், அதன்பின் வேங்கையனை தனியாக இழுத்துக் கொண்டு சென்றனர் ஜானகியும் மூர்த்தியும், அவர்கள் என்ன கேட்பார்கள் என முன்பே அறிந்திருந்தான் அதனால்
”என்ன கேட்கப் போறீங்கன்னு எனக்கு தெரியும்”
”என்ன தெரியும் சத்தியம் பண்ணுங்க உங்க மனசுல மஹதி இல்லைன்னு” என ஜானகி கேட்க அவனோ சத்தியம் செய்ய மறுத்தான்
”எதுக்கு இப்படி உங்களையும் ஏமாத்திக்கிட்டு பாவம் மஹதியையும் ஏமாத்தறீங்க நான் செஞ்ச அதே தப்பை செய்யாதீங்க” என மூர்த்தி சொல்ல
”நான் யாரையும் ஏமாத்தலை”
”மஹதி உங்களைதான் விரும்பினா”
”ஆனா அவளுக்கு என்னை விட பாஸ்கரன்தான் ஏத்தவன்”
”போதும் நிப்பாட்டுங்க” என ஜானகி கத்த மூர்த்தியோ