(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

உன்னை தேடி வந்திருக்காங்க அவங்களையே கூப்பிட்டு பேசலாம் மஹதி”

  

”இல்லைம்மா வேணாம்மா”

  

”வேணாம்னு சொன்னா என்னடி அர்த்தம், உனக்கு வேங்கையன் வேணாமா அவரே மனம் மாறி உன்னை தேடி வந்திருக்காரு பார்த்தல்ல”

  

”அது 6 மாசம் கழிச்சி வருவாராம்மா“

  

”ஏன்டி அவருக்கும் கொஞ்சம் அவகாசம் தரனும்ல, யாருக்கும் பாதகம் வராம எல்லா பிரச்சனையையும் முடிச்சிக்கிட்டு நீதான் வேணும்னு வந்திருக்காரு, அவரோட அப்பாகூட நீ மயக்கம் போட்டு விழுந்ததும் சின்ன மருமகள்ன்னுதான் கூப்பிட்டாரு தெரியுமா”

  

”அப்படியா”

  

”ஆமாம் எனக்கென்னவோ அவங்க ஒரு முடிவோடதான் வந்திருந்தாங்க போல, இங்க அந்த பாஸ்கரன் குடும்பத்தைப் பார்த்துட்டு தப்பா புரிஞ்சிக்கிட்டு கிளம்பி போயிருக்காங்க, அப்ப கூட அந்த மங்களம் இருக்காங்களே அவங்க பிடிவாதமா இருந்தாங்க, ஆனா வேங்கையன்தான் அவரை இழுத்துக்கிட்டு போனாப்ல, மஹதி நான் சொல்றதைக் கேளும்மா, உனக்கு வேங்கையன்தான் சரிபட்டு வருவான், நீ ஆசைப்பட்டவனை கட்டிக்கிட்டாதான் உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்”

  

”அட போங்கம்மா நடந்ததை பார்த்துமா இப்படி பேசறீங்க வந்த மாப்பிள்ளை என்னை பொண்ணு பார்க்கதானே வந்தாங்க அதுக்கேவா அவரு கிளம்பி போயிட்டாரு, இது அநியாயம் ஏன் இருந்து எனக்கும் அவருக்குமான பந்தத்தை சொல்லி வந்தவங்களை அனுப்பியிருக்கலாம்ல ஏன் செய்யலை, எனக்கென்னவோ அவரே தேடி வந்தது போல இல்லை, அவங்கம்மா பிடிவாதம் பிடிச்சி அப்படி இப்படி பேசி கூட்டிட்டு வந்திருக்காங்க, வேற வழியில்லாம வந்தவரு இங்க பாஸ்கரன் இருக்கறதைப் பார்த்துட்டு அதான் சாக்குன்னு கிளம்பிப் போயிட்டாரு”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.