”வாம்மா ஜானகி வா வா” என மகேந்திரன் அழைக்க அவளும்
”அங்கிள் எப்படியிருக்கீங்க”
”நான் நல்லாயிருக்கேன்மா உட்காரு” என சொல்லியவர் மூர்த்தியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஜானகியிடம்
”இவரு மூர்த்திதானே”
”ஆமாம் அங்கிள் என் மாமாதான்”
“ரெண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கீங்க”
”எங்களுக்கு அடுத்த முகூர்த்தத்தில கல்யாணம், அதான் பத்திரிகை கொடுக்க வந்தேன் மஹதி இல்லையா அங்கிள்” என சொல்ல அவரோ நொடிந்துப் போனார்.
சாந்தி அவர்களின் பேச்சைக் கேட்டு கொதித்தார்
”வாடியம்மா வா உன்னாலதான் என் பொண்ணு வாழ்க்கை நாசமா போச்சி இப்ப உனக்கு சந்தோஷமா” என கேட்க ஜானகி அதிர்ந்தாள்
”என்ன சொல்றீங்க ஆன்ட்டி எனக்குப் புரியலை“
”புரியாத மாதிரி நடிக்காத என் பொண்ணை சந்தோஷமா இருக்கவிட மாட்டியா நீ, இப்ப எதுக்கு வந்த ஓ நீ காதலிச்சவனோட கல்யாணம் ஆகப்போறதை சொல்லி அவளை கஷ்டப்படுத்த வந்திருக்கியா”
”நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை ஆன்ட்டி“
”என்ன புரியலைங்கற, பாவம் மஹதி உனக்கு உதவ வந்து அந்த வேங்கையனை விரும்பினா,