ஒரு வார்த்தை சொல்லாம போயிட்டானே”
”எனக்கு ஒரே குழப்பமா இருக்கு, மஹதிக்கு கல்யாணம்ங்கற விசயம் வேங்கைக்கு தெரிஞ்சா கண்டிப்பா வருத்தப்படுவாரு”
”வருத்தம்தான் படுவாப்ல அப்பவும் மஹதிக்காக வரமாட்டாரே”
”என்னால எல்லார் வாழ்க்கையும் இப்படி தரம் புரண்டுடிச்சே, ஆரம்பத்திலேயே நான் ஜானகியை கல்யாணம் செய்திருந்தா வேங்கையன் ஜானகியை கல்யாணம் செய்யாமலே போயிருந்திருப்பாரு, ஆரம்பமே என்னாலதான் முடிவும் என்னாலதான்னு ஆயிடுச்சி, இதை எப்படி சரிசெய்றதுன்னு தெரியலையே”
”எனக்கும் தெரியலை நடக்கறது நடக்கட்டும்னு விட்டுட்டேன்” என பேச மூர்த்திக்கு இருப்பு கொள்ளவில்லை.
மறுபக்கம் ஜானகியோ மஹதியின் அறைக்குச் சென்றாள், அங்கு மஹதியோ தனது திருமண பத்திரிகையை பார்த்து சோகமாக இருந்தாள்
”மஹதி” என கோபமாக வந்தாள் ஜானகி அவளைக்கண்டதும் மஹதிக்கு பெரிய அதிர்ச்சிதான்
”நீயா“
”நானேதான் என்னடி நடக்குது இங்க, உனக்கு கல்யாணமாமே”
”ஆமாம் இதோ பாரு கல்யாண பத்திரிகை” என நீட்ட ஜானகி அதை வாங்கிப் பார்த்து கொதித்துப் போய் அதை வீசி எறிந்தாள்
”என்ன செய்ற ஜானு”
”என்ன நடக்குது இங்க நீ பாட்டுக்கு இங்க கல்யாணத்துக்கு ரெடியாகற, அப்ப வேங்கையன் நிலைமை”