”அதான் நீயிருக்கியே”
”எது நானா என்ன விளையாடறியா எனக்கும் மூர்த்திக்கும் கல்யாணம், நானே என்னோட கல்யாண பத்திரிகையை உனக்கு கொடுக்கலாம்னு வந்தேன், மூர்த்தி என்கூடதான் வந்திருக்காரு, வெளிய உங்கப்பாவோட பேசிக்கிட்டு இருக்காரு, வேணும்னா போய் பாரு போ” என சொல்ல மஹதிக்கு திக்கென்றது
அவசர அவசரமாக அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வர அங்கு மூர்த்தியிருக்கவும் அதிர்ந்தாள்
”நீங்க எப்படி ஒண்ணு சேர்ந்தீங்க” என மூர்த்தியிடம் கேட்க மூர்த்தியோ
”நாங்க ஒண்ணு சேர்ந்தது ஆச்சர்யம் இல்லை நீயும் வேங்கையனும் பிரிஞ்சதுதான் அதிர்ச்சியா இருக்கு, என்னாச்சி உங்களுக்கு” என கேட்க மஹதி குழம்பினாள் ஜானகியோ மஹதியை பிடித்து உலுக்கினாள்
”பைத்தியமாடி உனக்கு, வேங்கையன் மனம் திருந்தி நீதான் வேணும்னு உன்னைப் பார்க்க புறப்பட்டு வந்தாரு, வந்த இடத்தில உனக்கு பொண்ணு பார்க்கற படலம் நடந்திருக்கு, உனக்காக பார்த்த மாப்பிள்ளை வேங்கைக்கு நண்பனா போயிட்டான், அதனால அவர் பாட்டுக்கு கிளம்பி ஊருக்கு வந்தவரு நீங்க ஊர்லயே இல்லைன்னு எங்க எல்லார்கிட்டயும் பொய் சொல்லிட்டாரு தெரியுமா”
”ஏன் பொய் சொல்லனும் ஏன் போகனும் இருந்து அவர் எதுக்காக வந்தார்ன்னு சொல்லியிருக்கலாம்ல கோழை போல ஓடி ஒளியறாரே சே இவரா வேங்கையன் இல்லை இல்லைவே இல்லை”
”இப்ப இதுவாடி பிரச்சனை உனக்கு, யாரு வீரன் யாரு கோழைன்னு போட்டியா நடக்குது இங்க, வாழ்க்கை பிரச்சனைடி இது, அவர்தான் விட்டேத்தியா இருக்கார்னா நீயும் வீம்பா இருக்கியே”