”கேட்டாச்சி கேட்டாச்சி”
”என்ன சொன்னாரு”
”அவருக்கு பாஸ்கரனோட இருக்கற நட்புதான் முக்கியமாம்”
”ஓ அப்படியா சரி விடுங்க எனக்கு எங்கப்பா அம்மாதான் முக்கியம்”
”போதும்டி எல்லாமே தப்பா இருக்கு, நான் வேணா அந்த பாஸ்கரன்கிட்ட பேசி பார்க்கவா”
”வேணாம் இதுல ஏன் நீ அவரை இழுக்கற, எல்லாம் தெரிஞ்சவரே நட்புதான் முக்கியம்னு ஒதுங்கறப்ப யார் என்ன சொன்னாலும் பிரயோசனமில்லையே விடுடி”
”என்னத்த விடறது நான் விடறதாயில்லை கிளம்பு வாடி எழுந்துவா”
”எங்க”
”அவர் முன்னாடி உன்னை நிப்பாட்டறேன் உன் முகத்தை பார்த்து சொல்லட்டும் அப்புறம் நானே விலகிடறேன்“
”அவரு சொல்வாருடி”
”அதையும் பார்க்கலாம் வா” என அழைக்க மஹதியும் கிளம்பிச் சென்றாள்.
வேங்கையனோ கல்யாணத்திற்காக மளிகை லிஸ்ட் எழுதிக் கொண்டிருந்தான், அவனுக்கு மங்களம் ஒவ்வொரு பொருளாக சொல்ல சொல்ல வீரசிங்கமும் மற்றவர்களும் பத்திரிகைக்கு நாலு பக்கமும் மஞ்சள் குங்குமம் வைத்தபடி இருந்தார்கள்.
ஜானகி மஹதியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வேங்கையன் முன் நிப்பாட்ட அதை