”நான் போய் பார்க்கிறேன் நான் பேசினா அவள் புரிஞ்சிக்குவா”
”அவள் யார் பேச்சையும் கேட்கற நிலைமையில இல்லை பிடிவாதமா இருக்கா”
”ஓஹோ அப்படியா பரவாயில்லை அங்கிள் நான் பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு மஹதியை தேடிச் சென்றாள் ஜானகி.
மூர்த்தியோ மகேந்திரனிடம் வந்தான்
”வேங்கையன் எதுக்காக நீங்க ஊர்லயே இல்லைன்னு பொய் சொல்லனும்”
”தெரியலை வேங்கையன் மனசுல என்ன இருக்குன்னு தெரியலை இவ்ளோ தூரம் தேடிவந்தவன் எதுக்காக போகனும் இருந்து வந்த விசயத்தை சொல்லியிருக்கலாமே”
”நான் வேணா வேங்கைக்கிட்ட பேசட்டுமா இப்பலாம் நாங்க சகஜமா பேசிக்கிறோம்”
”பேசறதால ஒரு பிரயோசனம் இல்லை இதப்பாரு” என சொல்லி கல்யாண பத்திரிகையை நீட்ட அதை வாங்கிப்பார்த்து அதிர்ந்தான் மூர்த்தி
”என்னது இது உண்மையாவா”
”உண்மைதான்”
”எங்களுக்கு முன்னாடியே மஹதிக்கு கல்யாணம் ஆகப் போகுதா”
”ஆமாம்”
”இது அநியாயம் எப்படி மஹதி வேங்கையனை மறந்துட்டாங்க“
”அவள் மறக்கலை கடைசியா கூட அவனைதான் தேடினா ஆனா அவன்தானே அவள்கிட்ட