(Reading time: 22 - 44 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

கண்ணகியும் மாதவியும் அவசர அவரசமாக போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்வதற்குள் கோவலனை கோர்ட்டுக்கு அழைத்து சென்றிருந்தார்கள், அதில் அவர்கள் அவசரமாக கோர்ட்டுக்குச் சென்றார்கள், உதயமூர்த்தியும் வக்கீலும் கோவலனிடம் பேசிக் கொண்டிருக்க அவ்விடம் வந்து நின்றார்கள் கண்ணகியும் மாதவியும்

  

இரு பெண்களையும் ஒன்றாக பார்த்ததும் பரவசமானான் கோவலன், கண்ணகி இருப்பது தெரிந்தும் வேண்டுமென்றே

  

”மாதவி என் அன்பே எனக்காக வந்துட்டியா” என சொல்ல கண்ணகி அதிர்ந்தாள் மாதவிக்கு வேடிக்கையாக இருந்தது.

  

”கோவலன் என்னால நீங்க இப்படி மாட்டிக்கிட்டீங்களே” என மாதவி பேச

  

”உனக்காக நான் என் உசுரை கூட தர தயாரா இருக்கேன் மாதவி” என சொல்ல கண்ணகியால் தாங்க இயலவில்லை, அவ்விடம் விட்டு சென்று ஒரு ஓரமாக கோபமாக அமர்ந்துவிட மாதவியோ கோவலனிடம்

  

”இது என்ன விளையாட்டு”

  

”சும்மாதான் ஆமா உன்னை யாரு இங்க வர சொன்னது இருக்கற பிரச்சனை போதாதுன்னு நீயும் வந்துட்டியா”

  

”நான் ரொம்ப பயந்துட்டேன் அதான் வந்தேன் கண்ணகி பாவம் அவளுக்கு துணைக்கு வந்தேன்”

  

”அதானே பார்த்தேன் எப்படியோ கண்ணகிக்கு துணையா நீயிருக்கியே அது போதும் எனக்கு”

  

”ஆமா எந்த ஆதாரத்தின் அடிப்படையில உங்களை கைது செய்தாங்க”

  

2 comments

  • ஒரு கதைக்கு வில்லன் ரொம்ப முக்கியம், இதுல சிலம்பு முதல்ல இருந்தே டம்மியா காட்டிட்டு, கடைசி 2 எபிசொட்ல கொடூரமா திட்டம் போடுரவன்னா எப்படி.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.