(Reading time: 28 - 56 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

அந்த குடும்பமே இருக்க கூடாதுன்னு நினைச்சி கார்ல இருந்த ஒயர்களை அறுத்தான், அதன் காரணமாவே கார் விபத்தாயிடுச்சி இதுல கோவலன் பங்கு எதுவும் இல்லை” என சொல்ல கோவலனுக்கு திக்கென்றது

  

அதுநாள் வரை தன் தாய் தந்தை இறப்புக்கு தான்தான் காரணம் என குற்ற உணர்வில் இருந்தவனுக்கு இப்போது நிம்மதி பிறந்தது, ஆனாலும் கோபத்தில் உதயமூர்த்தியை அடிக்க வர அவனை போலீசார் பிடித்துக் கொண்டனர்

  

”அமைதியா இருங்க கோவலன் அவர் பேசட்டும்” என ஜட்ஜ் சொல்ல கோவலன் அமைதியானான்.

  

உதயமூர்த்தியோ மேற்கொண்டு பேசினார்

  

”சிலம்புவாலதான் கார் விபத்தான விசயம் எனக்குத் தெரிஞ்சது, வழக்கம் போல பணம் கொடுத்து அதை விபத்தா மாத்தினேன், அப்பவும் அவன்கிட்ட எடுத்து சொன்னேன் வேணாம் ஒழுங்காயிருன்னு, ஆனா அவன் கேட்கலை, செய்ற தப்பை செய்துட்டு கோவலனோட நட்பாவே பழகினான், படிச்சான், அவனோட கல்லூரியிலயே வேலைக்கு சேர்ந்தான்.

  

எப்படியாவது குறுக்கு வழியிலயாவது பெரியாளாகனும் ஆடம்பரமா வாழனும்ங்கறது அவனோட ஆசை, அதுக்காக பிரின்சிபால் பதவிக்கு ஆசைப்பட்டான், அப்ப நான்தானே அங்க பிரின்சிபாலா இருந்தேன் முடியாதுன்னு சொன்னேன், உன்னால எல்லா மாணவர்களும் கெட்டுப்போயிடுவாங்கன்னு சொன்னேன், ஆனா அவன் பிடிவாதம் பிடிச்சான், அவன் செஞ்ச தப்பை அவனுக்கு சொல்லி மிரட்டப்பார்த்தா அவனோ தன்னை காப்பாத்த நான் செய்த தப்பை எடுத்து சொல்லி மிரட்டியே வைஸ்பிரின்சிபால் பதவிக்கு வந்தான்.

  

ஏற்கனவே அவனுக்காக கல்லூரியில இருந்து நிறைய பணத்தை செலவழிச்சேன், அதுக்கான கணக்கு வழக்குகளை நானே சரியாக்கினேன், சிலம்பு வந்தபின்னாடி அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பிச்சான், அதுக்காக நானும் வேறு வழியில்லாம கல்லூரி பணத்தை திருட ஆரம்பிச்சேன்

  

கோவலன் லண்டன்ல படிச்சி முடிச்சிட்டு வந்து தாளாளர் ஆன பின்னாடி எனக்கு பயமே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.