(Reading time: 28 - 56 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

வந்தது, எங்க கணக்கு வழக்கு பார்த்தா நம்ம தப்பு வெளிய வந்துடுமோன்னு பயந்தேன், ஆனா சிலம்புவோ கோவலனை தன் கைக்குள்ள வைச்சிக்கிட்டான், அந்த கல்லூரி மோசமா மாறினதுக்கு அவன்தான் காரணம், ஒழுங்கா இருந்த காலேஜ்ல புதுமையை புகுத்தறேன்னு தப்பான யோசனைகளை கோவலனுக்கு சொல்லி வைச்சான், கோவலனும் அதை நம்பி அப்படியே செயல்படுத்தினான், அதனால என்னாச்சி கல்லூரி ஒழுங்கா நடக்காம போயிடுச்சி, அதை பத்தி யாராவது ஈஸ்வரமூர்த்திகிட்ட சொல்லி வைப்பாங்கன்னு தெரியும், அதனால நானே போய் காலேஜ் இப்படி நடக்குதுன்னு சொல்லி வைச்சேன், அவனும் வருத்தப்பட்டான்.

  

இப்படியே போனா ஒரு நாள் ஈஸ்வரமூர்த்திக்கு சந்தேகம் வந்துடும், நாங்க இரண்டு பேரும் மாட்டிக்குவோம்னு நினைச்சி நான் பிரின்சிபால் பதவியை விட்டு விலகறதா முடிவு எடுத்தேன் என்னால முடியலை, என் வேலையை சரியா செய்ய விடாம தடுத்தான் சிலம்பு, அவனால நானும் நிறைய தப்புகளை செய்து செய்து எங்கே நான் மாட்டிக்குவேனோன்னு பயந்து பயந்து கடைசியில எனக்கு இதய நோயே வந்துடுச்சி.

  

2 முறை அட்டாக் வந்தது, மூணாவது முறை வந்தா என்னை காப்பாத்த முடியாதுன்னு மருத்துவர் சொன்ன பின்னாடிதான் நான் உஷாரானேன், எனக்கு என் உயிர் முக்கியம் இதுநாள் வரை சிலம்புவுக்கு எல்லாம் செய்தாச்சி, இனி அவனுக்கு உதவ கூடாது, கல்லூரி இந்த கதியானதுக்கு நாமதானே காரணம், அதனால நான் குற்ற உணர்ச்சியில இருந்தேன், நான் செய்த தப்பை நானே சரியாக்க எண்ணி என்னோட வேலையை ராஜினாமா செய்து அதுக்கு பதிலா அந்த இடத்துக்கு கண்ணகியை நியமிச்சேன், அது என் பையனுக்கு சுத்தமா பிடிக்கலை

  

என்கிட்ட வந்து சண்டைப் போட்டான், அவன்தான் பிரின்சிபாலாகனும்னு சொன்னான், ஆனா என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன், அதுல இருந்து அவனுக்கு நான் எதிரியானேன், கண்ணகியும் அந்த கல்லூரியை கஷ்டப்பட்டு வழிநடத்தி நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தா, கண்ணகியை ஒழிக்கனும்னு சிலம்பு திட்டம் தீட்டினான், கண்ணகியை காப்பாத்தனும்ங்கற எண்ணத்தில நான் ஈஸ்வரமூர்த்திகிட்ட கண்ணகிக்கும் கோவலனுக்கும் கல்யாணம் செய்து வைக்கனும்னு வற்புறுத்தினேன், அதுல அவனும் கோவலனை ப்ளாக்மெயில் செய்து கல்யாணம் நடத்தி வைச்சாப்ல, இதனால கண்ணகி காப்பாத்தப்பட்டா, அதுவே சிலம்புவுக்கு பிடிக்கலை, என்னை திட்டினான், அடிச்சான், பொறுத்துக்கிட்டேன்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.