பார்த்தார், எப்படியோ அவனை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நிப்பாட்டினார்கள்
”எனக்கு எதுவும் தெரியாது ஒரு ஆள் வந்து கட்டுக்கட்டா பணம் கொடுத்து சிலம்பரசனோட அப்பாவா என்னை நடிக்க சொன்னாரு அவ்ளோதான்”
”யார் அந்த ஆளு”
”இதோ இந்தாளுதான்” என உதயமூர்த்தியைக்காட்ட அதற்கும் அனைவரும் அதிர்ந்தார்கள்.
ஜட்ஜோ
”உதயமூர்த்தி இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க”
”நான்தான் அப்படி செய்ய வைச்சேன், ஏன்னா சிலம்பு என் மகன்னு இதுநாள் வரை நான் யாருக்கும் காட்டிக்கலை, இப்ப சிலம்பு என் மகன்னு தெரிஞ்சா என் மானம் மரியாதை போயிடும், பழைய கதையெல்லாம் வெளிய வரும், அதுக்கு பயந்து பொய்யான ஒரு ஆளை நான் ஏற்பாடு செய்தேன், டிஎன்ஏ டெஸ்ட் கூட நான் எடுத்துக்கிட்டு பார்த்தேன் ஆனா அது சிலம்பு கிடையாது செத்தது எவனோ ஆனாலும் என் மகனை காப்பாத்த எண்ணி அந்த உடம்பு சிலம்பு உடையதுங்கற மாதிரி பொய்யான ரிசல்ட்டை நான் ஏற்பாடு செய்து அவனோட அப்பான்னு பொய்யான ஆள் பேர்ல மாத்திட்டேன்” என சொல்ல ஜட்ஜ்க்கு தலை வலித்தது
”இப்ப உங்க பையன் எங்க இருக்கான்”
”தெரியலை” என சொல்ல ஜட்ஜோ கோவலனது வக்கீலிடம்
”தீர்ப்பு எழுதிட்டேன் ஆனாலும் நடக்கறதை வைச்சி பார்த்தா உண்மையான சிலம்பரசன் உயிரோட இருக்கான்னு நினைக்கிறேன், அதனால தீர்ப்பை மாத்திடறேன், உங்களுக்கு கால அவகாசம் தரேன் அதே போல காவல்துறையினருக்கும் இறந்துப் போன உடல் யாருடையது என கண்டுபிடிக்கவும் உண்மையான சிலம்பரசன் எங்க இருக்கான்ங்கறதையும் கண்டுபிடிக்குமாறு நான் ஆணையிடறேன்” என சொல்லி முடிக்க அதே நேரம் கண்ணகி