ஒன்றைப் பார்த்துவிட்டு நெருடலாக இருந்தது நேராக சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோவிடம் சென்றவள் அதை மாதவியிடம் காட்டி
”என்னடி இது” என மாதவி அலற கண்ணகியோ அதை பாட்டியிடம் காட்ட அவரோ முகம் மலர்ந்து என் மகன் என்று சொன்னதும்தான் தாமதம் கண்ணகிக்கு தலையில் இடிவிழுந்தது போலானது.
அவசர அவசரமாக கண்ணகி உதயமூர்த்திக்கு போன் செய்ய அவர் போன் சுவிட்ச் ஆப் என வர நொந்தேப் போனாள்.
”கண்ணகி என்னாச்சி அந்தாளு கிடைச்சானா இல்லையா”
”போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு மாதவி”
”சே இப்படி மோசம் போயிட்டோமே“
”அதான் எனக்கும் புரியலை, சிலம்பரசன் உதயமூர்த்தியோட மகனா அதிர்ச்சியா இருக்கு மாதவி”
“என்னமோ சதியிருக்கு கண்ணகி, ஒவ்வொரு முறையும் உதயமூர்த்தி சிலம்புவை தன் மகனா எங்கயும் காட்டிக்கிட்டதில்லை”
”ஆமாம் மாதவி, சிலம்பு வந்தாலே அவர் திட்டுவாரு விரட்டுவாரு, அவனும் உதயமூர்த்திகிட்ட எகத்தாளமாதான் பேசி வைப்பான், அவங்க கதையை எப்படி தெரிஞ்சிக்கறது” என கேட்க மாதவியோ அந்த பாட்டியைப் பார்த்து
”இந்த பாட்டியை உலுக்கினா மொத்த கதையும் வந்துடும் இப்ப பாரு” என சொல்லிய மாதவி அந்த பாட்டியிடம் சென்று பேசினாள்.
அவர் புரிந்துக் கொண்டு நடந்ததை சொல்வதற்குள் ஒரு மணி நேரமாகிவிட்டது. ஆனாலும் பாட்டி சொன்ன கதையை கவனமாக கேட்டுவிட்டு இருவரும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு