பார்த்தல்ல, இனியும் நாம அமைதியா இருந்தா அவங்க நம்மளை கொன்னாலும் கொல்வாங்க ஈஸ்வரா, ஏதாவது செய்யனும் பெரிசா செய்யனும் அப்பதான் அவங்க நம்மளை விட்டுடுவாங்க, அதுக்கு என்ன செய்றது சொல்லு” என போராளி ஒருவன் கேட்க ஈஸ்வரனோ ஆண்டாளின் நினைவில் மதிமயங்கி இருந்தான், அவனது எண்ணம் இங்கில்லை என தெரிந்துக் கொண்ட இன்னொரு போராளி
”ஈஸ்வரா தேவையில்லாம ஆசைவைக்காத, அவள் வானத்தில இருக்கற நிலா போல, ஏணி வைச்சி ஏறினாலும் எட்டாத உசரத்தில அவள் இருக்கா அவளை மறந்துட்டு நம்ம விடுதலையை பத்தி யோசி” என சொல்ல அதுவும் ஈஸ்வரனின் காதில் விழவில்லை தனக்குதானே ஆண்டாளை நினைத்து புன்னகை புரிந்தான்.
அதில் அனைவருக்குமே கோபம் எழுந்தது, அவனை பிடித்த உலுக்கவும் இயல்புக்கு வந்த ஈஸ்வரனோ அனைவரையும் பார்த்து அசடுவழிந்தான் அவர்களோ
”நம்மளோட எதிரி ஆவுடையப்பன், அவனோட பொண்ணை விரும்பாத, அந்தாளு உன்னை உசுரோடவே மண்ல புதைச்சிடுவான்” என சொல்ல ஈஸ்வரனோ
”சே சே அப்படியெல்லாம் இல்லை நம்மளை போலவே அந்த பொண்ணும் நமக்காக பேசறாளே அதைதான் நினைச்சேன்”
”அப்படியா இல்லை அவளோட அழகுல மயங்கிட்டியா”
”அதுவும்தான்”
என சொல்ல அனைவரும் அவனை பார்த்து முறைத்தார்கள்
”எதுக்குடா முறைக்கறீங்க, அவளை பார்த்தீங்கள்ல எப்படியிருக்கா பாரு, நிலவு கூட பொறாமை படற அளவு பேரழகியா இருக்கா, ஆவுடையப்பன் பொண்ணுங்கறதால அவளை நாம எதிர்க்கனுமா, அந்தாளோட ஒரு குணம் கூட அவள்கிட்ட இல்லை நம்மளை பத்தி யோசிக்கறா, ஊரை பத்தி யோசிக்கறா, அந்த குணம் எனக்கு பிடிச்சிருக்கு” என ஈஸ்வரன் சொல்ல போராளி ஒருவனோ