”அப்போ ஊரை ஒண்ணாக்கப் போறீங்களா”
”அதான் இல்லை மேலவீதியை நான் ஆளறேன், கீழவீதியை நீ ஆண்டுக்க என்ன நான் சொல்றது சரிதானே”
”நீங்க சொன்னா சரியாதான்ங்க இருக்கும்“
”இந்த உடையில நல்லாதான் இருக்க, நீ கீழவீதிக்காரன்னு சொன்னா ஒருத்தனும் நம்பமாட்டான்” என சொல்ல ஈஸ்வரன் அசடுவழிந்தான்
”உன் பேரை மாத்தனும்“
”தாராளமா மாத்திடுங்கய்யா“
”என்னடா நான் என்ன சொன்னாலும் சரி சரிங்கற“
”நீங்க எனக்கு கடவுளாச்சே, உங்க சொல்லே எனக்கு வேதவாக்கு“
என சொல்ல கலகலவென சிரித்த ஆவுடையப்பன்
”இனிமேல உன் பேரு வெறும் ஈஸ்வரன் இல்லை சங்கமேஸ்வரன், என்னோட மருமகன் அந்த மிடுக்குல நீயிருக்கனும் புரியுதா“
”புரியுதுங்கய்யா நல்லாவே புரியுது” என சொல்லி விஷமமாக சிரித்து வைத்தான்.
நாட்கள் கடந்தது. ஆண்டாளின் மனதை வெகுவாக கவர்ந்தான் சங்கமேஸ்வரன், அவளுக்கு எப்படி பிடிக்குமோ அப்படி நடந்துக்கொண்டான், அதே போல ஆவுடையப்பனுக்கு எப்படி பிடிக்குமோ அது போல பேசி அவரின் மனதில் இடம்பிடித்தான், ஆவுடையப்பனுக்கு மகன் இல்லாத குறையை போக்கினான். ஆவுடையப்பனின் மருமகனாக ஈஸ்வரன் வரும் செய்தி