(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

முடியாம வேற ஊருல போய் பிழைச்சிக்கலாம்னு ஓடிட்டதா சொல்லிடறேன்யா, யாருக்கும் சந்தேகம் வராது, என்னை அந்த ஊரே நம்புது, நான் சொன்னா போதும் கீழவீதியே கேள்வி கேட்காம என் சொல்படி நடக்கும்” என சொல்ல ஆவுடையப்பன் முதல் முறை ஈஸ்வரனை ஏற இறங்கப் பார்த்து மென்மையாக சிரித்து

  

”சரி வேலையை முடிச்சிட்டு வந்து என்னை பார், அதுக்குள்ள நான் என் பொண்ணுகிட்ட பேசிப் பார்க்கிறேன்“

  

“சரிங்கய்யா உத்தரவுங்கய்யா” என பவ்யமாக சொல்லிவிட்டு அவ்விடம் விட்டுச் சென்றான். அவன் சென்றதும் ஆவுடையப்பன் ஈஸ்வரனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என முடிவே எடுத்துவிட்டார், இதை எப்படி ஆண்டாள் ஒப்புக் கொள்வாள், எப்படி அவளை சம்மதிக்க வைப்பது என்றுதான் ஆலோசனை செய்தார்.

  

ஈஸ்வரனோ தனது திட்டம் நிறைவேறியதை நினைத்து மகிழ்ச்சியுடன் தன் கூட்டாளிகளை சந்திக்க வந்தான். அவர்களோ ஈஸ்வரனின் வரவிற்காகவே காத்திருந்தார்கள். ஈஸ்வரன் வரவும் அதிர்ந்தார்கள்

  

”நண்பா என்ன இது இரத்த காயத்தோட வந்திருக்க, உன்னை அந்த ஆவுடையப்பன் தாக்கிட்டானா”

  

”ஆமாம் நான் பேசறதுக்கு முன்னாடியே நான் அவனை கொல்ல வந்தேன்னு நினைச்சி என்னை கத்தியால வெட்டிட்டான், அதுக்கு அப்புறம் நான் சொல்ல வேண்டியதை சொல்லி முடிச்சேன், அதுல அவனும் அமைதியானான்“

  

“அப்படி என்னதான் சொன்ன”

  

”ஊரு ஒண்ணாகறதுக்கான வழியை ஆண்டாள் சொன்னாளே அதை அப்படியே சொன்னேன்“

  

”அதை ஆவுடையப்பன் கேட்டு நடப்பானா“

  

“தெரியலை பார்க்கலாம் விடியற நேரமாயிடுச்சி, நாம இங்க இருந்தா ஆபத்து வாங்க வந்த

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.