விழித்தெழுந்த ஆவுடையப்பனோ இரத்த காயங்களுடனும் இரத்தம் படிந்த கத்தியுடனும் கலங்கிய கண்களுடனும் நின்றிருந்த ஈஸ்வரனை கண்டதும் பதறினார்
”டேய் நீயா இங்க என்னடா செய்ற“
என கத்த அதற்குள் அவன் சட்டென தரையில் மண்டியிட்டு அமர்ந்து தன்னிடம் இருந்த கத்தியை முன்னால் வைத்துவிட்டு கைகூப்பி
”ஐயா என்னை மன்னிச்சிடுங்கய்யா, உங்களை எதிர்த்து நான் பெரிய தப்பு செய்துட்டேன், என்னை மன்னிச்சிடுங்கய்யா” என கண்ணீருடன் கதற ஆவுடையப்பன் சற்று அமைதியாகி
”எழு முதல்ல எழுந்திரு, என்னாச்சி ஆமா நீ ஏன் இப்படி ரத்த வெள்ளத்தில இருக்க நீ எதுக்காக இங்க வந்த” என கேட்க அதற்கு ஈஸ்வரனோ எழுந்திருக்காமலே மண்டியிட்டபடியே
”ஐயா ஒரு தப்பு நடந்துப் போச்சிங்கய்யா, காலையில நடந்த சம்பவத்துக்கு அப்புறம் போராளிங்க ஒண்ணு கூடி உங்களையும் உங்க மகளையும் கொல்லனும்னு திட்டம் தீட்டி இங்க வந்துட்டானுங்க, விசயம் தெரிஞ்சதும் அவங்களை தடுக்க நானும் இங்க வந்தேன்“
”ஐயோ என் பொண்ணு என் ஆண்டாள் என்ன ஆனா” என பதற
”பதறாதீங்கய்யா உங்க மகளுக்கு எந்த கெடுதலும் நடக்கலை, நடக்கவிடாம தடுத்துட்டேன்”
”எப்படி”
”இங்க வந்திருந்த என் கூட்டாளிங்க கிட்ட கெஞ்சினேன், அவங்களை கொல்ல வேணாம், நியாயமா போராடலாம்னு ஆனா, அவனுங்க கேட்கலை நீங்க இந்த அறையில இருக்கற விசயம் அவங்களுக்குத் தெரியலை, பக்கத்து அறையில இருந்த ஆண்டாளை பார்த்ததும் அவளை அனுபவிச்சி கொல்லனும்னு திட்டம் தீட்டினாங்க, அதை நான் தடுத்தேன் ஆண்டாளை காப்பாத்த அவளை அவளோட அறையில தள்ளிட்டு வெளிய கதவு சாத்தி தாள்பாள் போட்டு என் ஆளுங்ககிட்ட பேசினேன், அவங்க ஒத்துக்கலை, என்னை எதிர்த்தாங்க, ஆண்டாளை அவங்க கொல்லக் கூடாதுன்னு நினைச்சேன் அதனால வேற வழியில்லாம