(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

நானே என் கையால என் கூட்டாளிகளை வெட்டி கொன்னுட்டேன் ஐயா, வெட்டி கொன்னுட்டேன்” என கதறி கதறி பேச பேச ஆவுடையப்பனுக்கு நிம்மதியாகவும் இருந்தது, ஈஸ்வரனது செயலால் அவனை பாராட்டவும் செய்தார்

  

”பலே ஈஸ்வரா மனிதாபிமானத்தோட நடந்துக்கிட்ட, என் பொண்ணை காப்பாத்திட்ட உனக்கு என்ன வேணும் கேளு, உன் எடைக்கு எடை தங்கம் தரேன் இல்லையா நீ கேட்கற அளவுக்கு நிலம் புலம் தரேன் கேளு”

  

”எனக்கு அதெல்லாம் வேணாம்யா, ஏதோ இன்னிக்கு எனக்கு விசயம் தெரிஞ்சது, உடனே நான் வந்து உங்க பொண்ணை காப்பாத்தினேன், இப்படியே தினமும் என்னால காப்பாத்த முடியுமா, நான் என் ஆளுங்களையே வெட்டிக் கொன்ன விசயம் தெரிஞ்சாலே கீழவீதியாளுங்க என்னை அடிச்சே கொன்னுடுவாங்களே“

  

”பயப்படாத உனக்கு நிறைய பணம் தரேன் அதை எடுத்துக்கிட்டு ஏதாவது ஒரு ஊருக்குப் போய் வாழ்ந்துக்க“

  

”சரிங்கய்யா அப்படியே செய்றேன் ஆனா, எங்க ஆளுங்களால உங்க பொண்ணுக்கோ உங்களுக்கோ மறுபடியும் ஆபத்து வந்தா என்ன செய்வீங்க, உங்க பொண்ணோட மானத்தை சீரழிச்சி அவளை கொல்லனும்னு வெறித்தனமா அலையறவங்களை உங்களால எப்படி தடுக்க முடியும்ய்யா” என கேட்க ஆவுடையப்பனுக்கு கவலை வந்து ஒட்டிக் கொண்டது. அவர் மகளை நினைத்து வருந்த அந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொண்டான் ஈஸ்வரன்

  

”ஐயா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, நேரத்தோட உங்க மகளுக்கு கல்யாணம் செய்து பத்திரமா வேற ஊருக்கு அனுப்பி வைச்சிடுங்க அதான் நல்லது”

  

”நீ சொல்றதும் சரிதான் அதையே செய்றேன்“

  

”அப்ப உங்க உயிருக்கு ஆபத்து வந்தா என்ன செய்வீங்கய்யா”

  

”என்னோட பாதுகாப்புக்கு ஆட்களை அதிகமாக்கறேன்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.