(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் கீழவீதியாளுங்க ஒட்டு மொத்தமா ஒண்ணு கூடி உங்களை அழிக்க வந்தா உங்க ஆட்களால உங்களை காப்பாத்த முடியாதுங்கய்யா“

  

”அதுக்கு என்ன செய்யலாம்ங்கற, ஊரை ஒண்ணாக்கி கீழவீதியாளுங்கிகட்ட நான் அவமானப்பட்டு நிக்கனுமா அது முடியாது“

  

”சே சே நான் அப்படி சொல்ல வரலை, இத்தனை நாளா நானும் எங்க ஆளுங்களுக்காக போராடினேன் ஆனா, அவங்களோட கீழ்த்தரமான எண்ணத்தை பார்த்ததும் இனிமேல அவங்களுக்கு துணையா நான் நிக்கப் போறதில்லைங்கய்யா உங்க பக்கம் நிக்கப் போறேன்“

  

”அப்படியா சந்தோஷம் சந்தோஷம்“

  

”எப்படிப்பார்த்தாலும் எங்க ஆளுங்க உங்க பொண்ணு மேல கண்ணு வைச்சிட்டாங்க, அவங்களை கல்யாணம் செய்து அனுப்பினாலும் உங்க மேல இருக்கற பகை உணர்ச்சியில அவங்க எந்த இடத்தில இருந்தாலும் தேடிப்போய் அவளை நாசமாக்கிடுவானுங்களோன்னு பயமாயிருக்குங்கய்யா“

  

”என்ன ஈஸ்வரா என்னென்னவோ சொல்ற”

  

”இப்படியும் நடக்க வாய்ப்பிருக்குங்கய்யா அதனால”

  

”அதனால”

  

”இந்த ஊர் இப்படியே ரெண்டா இருக்கனும், உங்களோட மதிப்பு மரியாதையை நீங்க இழக்ககூடாதுன்னா ஒரேஒரு வழிதான் இருக்கு“

  

”என்ன வழி”

  

”உங்க பொண்ணை கீழவீதியை சார்ந்த ஒருத்தனுக்கு கல்யாணம் செய்து வைச்சிட்டீங்கன்னா காலத்துக்கும் கீழவீதி உங்களுக்கு அடிமையா இருக்கும்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.