(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”இது போல நானே என்னை நிறைய நாள் தேத்தியிருக்கேன், பட் நோ யூஸ், இளங்கோவை என்னால மறக்க முடியலை, இப்ப கூட ப்ளைட்ல வரும் போது முதல் முறை லண்டனுக்காக ஹனிமூன் டிரிப் வந்ததுதான் நினைவுக்கு வருது, என்னால சட்டுன்னு எல்லாத்தையும் மறக்கமுடியலை தருண்”

  

”புது விசயம் வந்தா பழைய விசயம் தன்னால மறந்துடும் ஹரிணி”

  

”புரியலையே”

  

”புரியும் நேரம் வரும் போது உனக்கு எல்லாமே புரியும், இப்ப உன்னோட மனநிலைமையை நான் எப்படி மாத்தறேன் பாரு” என சொல்லிக் கொண்டே அவளிடம் அவனது பள்ளி கல்லூரி வாழ்க்கையை பற்றின சுவாரஸ்யமான விசயங்களை சொல்லிக் கொண்டும் இருந்தான், அவன் சொன்ன கதைகளைக் கேட்டு ஹரிணியும் கலகலப்பானாள்.

  

துபாய் விமான நிலையத்தில் ப்ளைட் லேண்ட் ஆனது. அங்கிருந்து லண்டன் செல்லும் விமானத்தில் இருவரும் ஏறினார்கள்.  ஒருவழியாக லண்டன் விமான நிலையத்தில் ப்ளைட் லேண்ட் ஆகியிருந்தது.  அதற்கு அவளும் இயல்பு நிலைக்கு மாறி உற்சாகமாக இருந்தாள் அவளின் உற்சாகத்தை பார்த்தபடியே இளங்கோவின் போட்டோவை அவளுக்கே அறியாமல் பிளைட்டிலேயே விட்டுவிட்டு அவளை அழைத்துக் கொண்டு ப்ளைட் விட்டு வெளியேறி ஏர்போர்ட் வாசலுக்கு வந்தான் தருண்

  

”நம்மளை பிக்கப் பண்ண யாராவது வருவாங்களா ஹரிணி”

  

”ஆமாம் வருவாங்க இந்நேரம் வந்திருக்கனுமே எங்க இருக்காங்க அதோ தருண் அங்க இருக்காங்க பாரு, போர்டு வைச்சிருக்காங்க பாரு” என சொல்ல அவனும் பார்த்தான் ஹரிணி மட்டும் எழுதப்பட்ட போர்டுடன் ஒரு லண்டன்வாசி இருக்கவே தருணோ

  

”என் பேர் ஏன் அந்த போர்டுல இல்லை”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.