(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

கண்டுபிடிச்சே தீருவேன்” என மனதுக்குள் சபதமிட்டபடியே அவனும் அங்கமுத்துவுடன் இணைந்து வேலையில் இறங்கினான்

  

சங்கமேஸ்வரனுக்கு திக்கென்றது. என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் அல்லாடினார்.

  

 வேலையாட்களும் மும்முரமாக அந்த மண்ணை தோண்டிக் கொண்டே வந்ததில் அவர்களுக்கே அதிர்ச்சி, தோண்ட தோண்ட எலும்புகூடுகள் கிடைக்கவும் அங்கமுத்துவும் அகத்தியனும் பயந்தே போனார்கள், இருவரின் பார்வை தாத்தாவை காண தாத்தாவோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார். அகத்தியனோ உடனே காவல்துறைக்கு தகவல் அளித்து வரவழைத்தான். அவர்கள் வரவும் சங்கமேஸ்வரனுக்கு குளிர் காய்ச்சலே எடுத்தது. தான் மாட்டிக்கொள்ள கூடாதென்பதற்காகவே நெஞ்சுவலி வந்தது போல் என பொய்யாக நடிக்க அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் அங்கமுத்து.

  

ஆனால் அகத்தியன் மட்டும் தாத்தாவின் செயலில் சந்தேகம் இருந்தது அதனால் அவன் எங்கும் செல்லாமல் காவல்துறையினரிடமே இருந்தான். இந்த விசயம் ஊரெங்கும் பரவியது சிறு குழந்தையின் எலும்பு கூடு முதல் பல எலும்பு கூடுகள் கிடைத்தது அதனால் இந்த விசயம் அனைவருக்குமே சந்தேகத்தை எழுப்பியது இதை அறிந்து வந்த நாசசியாவோ அந்த எலும்புக்கூடுகளைக்கண்டு மிரண்டாள்.

  

”நாச்சியா இதைபத்தி உனக்கு ஏதாவது தெரியுமா“

  

”தெரியாது சத்தியமா தெரியாது” என பயந்தாள் அவள் சொல்வதில் உண்மையிருப்பதை அறிந்தவன் அவளை தன் அறையில் இருக்க வைத்துவிட்டு காவல் அதிகாரியடம் வந்து பேசினான்

  

”இதெல்லாம் எப்படின்னு எனக்கு சத்தியமா தெரியாது”

  

”கவலைப்படாதீ்ங்க நாங்க இந்த எலும்புகூடுகளை வைச்சி ஏதாவது கண்டுபிடிக்க முயற்சி செய்றோம்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.