”உங்க தாத்தா உண்மையிலயே கீழவீதியை சார்ந்தவராம், ஒரு காலத்தில கீழவீதிக்கு நல்லது நடக்கனும்னு போராளியா இருந்தாராம், அப்புறம் எப்படியோ உங்க பாட்டியை கல்யாணம் செய்துக்கிட்டு இங்க வந்துட்டாராம், உங்க பாட்டியை கல்யாணம் செய்ததால கண்டிப்பா ஊருக்கு நல்லது செய்வாருன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க ஆனா, அப்படி நடக்கலையாம் ரொம்ப வருத்தப்பட்டு பேசினாரு அவர் பேசினப்ப எனக்கே வருத்தமா இருந்தது தெரியுமா”
”கதை சொல்லி முடிச்சிட்டியா, கதை நல்லாயில்லை இதை யார்கிட்டயும் சொல்லி வைக்காத”
”நான் பொய் சொல்லலை வேணும்னா நீங்களே அந்த வயசான தாத்தாகிட்ட போய் பேசிப்பாருங்க, இல்லைன்னா நான் சொன்னதை உங்க தாத்தாகிட்ட சொல்லிப்பாருங்க உங்க தாத்தா முகமே மாறிடும்“
”நிறுத்து நாச்சியா யாரோ ஒரு ஆள் சொன்னதை வைச்சிக்கிட்டு நீ பாட்டுக்கு என் தாத்தாவை மிரட்டிக்கிட்டு இருக்க, இந்த வேலையே வேணாம், நான் உன்னை எதுக்காக காப்பாத்தினேன்னு மறக்க வைச்சிடாத, கிளம்பு கார்மெண்ட்ஸ்க்கு போ” என விரட்ட அவளும் இன்று இது போதும், நாளை வேறொரு உண்மையை சொல்லி வைக்கலாம் என நினைத்தபடியே கார்மெண்ட்ஸ்க்குச் சென்றாள்.
அவள் சென்றதும் அகத்தியனுக்கு தலையே சுற்றியது. அந்நேரம் ஒரு வேலையாள் அவசர அவசரமாக அவனிடம் வந்தான்
”சின்னய்யா சின்னய்யா”
”என்ன ஏன் பதட்டமாக ஓடி வர்றீங்க“
”சின்னய்யா நம்ம வீட்டு பின்னாடி இருந்த தோட்டத்தில இருந்த பழமையான புளியமரம் வேரோட சாஞ்சிடுச்சிங்கய்யா”
”ஓ அப்படியா சரி அதனால என்ன அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்துங்க”