(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”மரத்தை வெட்ட ஆள் வந்துட்டாங்க சின்னய்யா ஆனா, மரத்தோட வேரை முழுசா எடுக்கனும் அது ஆழமா மண்ல புதைஞ்சிருக்குங்கய்யா“

  

”சரி அப்ப மண்ணை தோண்டிடுங்க, இதெல்லாம் என்கிட்ட சொல்லனுமா தாத்தாகிட்ட சொல்றதுக்கு என்ன அவர் பார்த்துக்குவார்ல“

  

”பெரிய ஐயா மரத்தை தோண்டி எடுக்க கூடாதுன்னு சொல்றாருங்க“

  

“ஏன்”

  

”தெரியலைங்கய்யா வந்து பாருங்க” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட அகத்தியனோ இது என்ன புது தலைவலி என நினைத்தபடியே புளியமரத்தைக் காணச் சென்றான்.

  

அங்கு வேலையாட்களை விரட்டிக் கொண்டிருந்தார் சங்கமேஸ்வரன், அதைக்கண்ட அகத்தியனோ வியந்தான்

  

”தாத்தா என்ன செய்றீங்க எதுக்காக அவங்களை விரட்டறீங்க, அவங்க வேலையை செய்ய விடுங்க“

  

”முடியாது நான் இந்த இடத்தை தோண்ட அனுமதிக்க மாட்டேன்”

  

”ஏன் என்ன காரணம் புளியமரம்தான் சாஞ்சிடுச்சே, இப்படியே விட்டா நல்லாயிருக்காது, வேரோட எடுத்துடறது நல்லதுதானே தாத்தா”

  

”அகத்தியா எல்லா விசயத்துக்கும் முன்னாடி வந்து நிக்காத, நான் ஒரு விசயம் சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும் கேள்வி கேட்காத விலகிப்போ” என அதட்ட அவரின் பேச்சும் செயலும் பார்வையும் வேறுபட்டு இருப்பதைக் கண்டு சந்தேகித்தான். அதற்காகவே ஆட்களிடம் சைகை செய்து

  

”மண்ணை தோண்டுங்க” என கட்டளையிட தாத்தா அதிர்ந்து

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.