”அகத்தியா” என கத்த
”கத்தாதீங்க தாத்தா, அப்படி என்ன மண்ல புதைஞ்சிருக்கு, தங்கமா வைரமா இல்லை ஏதாவது புதையலை மறைச்சி வைச்சிருக்கீங்களா இப்படி பயப்படறீங்க, எதுவா இருந்தா என்ன பார்த்துக்கலாம் தாத்தா”
”முடியாது நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என அவர் அலறியும் அகத்தியன் விடவில்லை.
வேலையாட்களை மண்ணை தோண்டுமாறு அவன் சொல்ல தாத்தா வேண்டாம் என சொல்ல வேலையாட்கள் குழம்பினார்கள். அந்நேரம் சத்தம் கேட்டு அங்கமுத்து ஓடிவந்து என்ன பிரச்சனை என பார்த்து குழம்பினான்
”எதுக்காக மாமா அவங்களை தோண்ட வேணாம்னு சொல்றீங்க, தோண்டி வேரை எடுக்கட்டும் விடுங்களேன்“
”முடியாது இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என தாத்தா சொல்ல அகத்தியன் தன் மாமாவிடம்
”மாமா இப்படிதான் தாத்தா ரொம்ப பிடிவாதம் பிடிக்கறாரு, எனக்கென்னவோ இந்த இடத்தில ஏதோ ஒண்ணு இருக்குன்னுதான் தோணுது”
என சொல்ல அங்கமுத்துவிற்கு உயில் பத்திரத்தின் நினைவு வந்தது
”கண்டிப்பா இருக்கலாம் அகத்தியா, நீ இப்படி வா நான் இந்த வேலையை கச்சிதமா செய்து முடிக்கிறேன்“ என ஆர்வமாக செல்ல அகத்தியன் வியந்தான்
”என்னாச்சி மாமாவுக்கு இவ்ளோ ஆர்வமா இருக்காரு, ஒருவேளை உயில் பத்திரம் மண்ணுக்கடியில இருக்கோ வாய்ப்பிருக்கு அதான் தாத்தா தோண்டவேணாம்னு சொல்றாரு போல விடக்கூடாது இன்னிக்கு என்ன ஆனாலும் சரி மண்ணுக்குள்ள என்ன இருக்குன்னு