அதற்குள் நாச்சியா தாத்தாவை ஒருவழியாக்கினாள்
”எப்படியோ நீங்க செய்த தப்புக்கள் ஒவ்வொண்ணா வெளிய வரும் போது நீங்க படற பாட்டை பார்க்கறப்ப எனக்கு ரொம்ப ஆனந்தமா இருக்கு” என்றாள் அதைக் கேட்டு சங்கமேஸ்வரன் கோபத்தில்
”இப்ப பேசறது யாரு நாச்சியாவா இல்லை அந்த ஆண்டாளா“
”ஆண்டாளா எந்த ஆண்டாளு“
”ஓ அப்ப நாச்சியாதான் பேசறதா”
”சரியா போச்சி பயத்தில உங்க புத்தி குழம்பிடுச்சா ஏதேதோ பேசறீங்களே”
”எல்லாம் என் நேரம்”
”அது போகட்டும் அந்த எலும்புகூடுகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்“
”எனக்குத் தெரியாது” என்றார் கோபமாக
“சரி அந்த குழந்தை எலும்புகூடு யாரோடது“
”எனக்குத் தெரியாது” என்றார் வெறுப்பாக
”ஒரு பொண்ணோட எலும்புக்கூடு இருந்ததே”
”அதான் எனக்குத் தெரியாதுன்னு சொல்றேன்ல, விட்டுத்தொலையேன் ஏன் என் உயிரை வாங்கற“