(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”இருக்கு“

  

”யார் மேல“

  

“நாச்சியா மேல”

  

”என் மேலயா நான் என்ன தப்பு செய்தேன்”

  

”எனக்கு உன்மேலதான் சந்தேகமா இருக்கு, நீயே கூட எலும்புகூடுகளை கொண்டு வந்திருக்கலாம்ல”

  

”அடேங்கப்பா உங்களுக்கு நான் உதவ நினைச்சா நீங்க என்னையே மாட்டிவிடப் பார்க்கறீங்களா, எக்கேடு கெட்டுப் போங்க எனக்கென்ன” என சொல்லிவிட அந்நேரம் நாச்சியா என அழைத்தபடி அகத்தியன் வந்தான். அவனை இவ்விருவரும் கண்டனர், கூடவே காவல்அதிகாரிகள் வரவும் சங்கமேஸ்வரன் அரண்டார், பயத்தில் அவரின் உடல் நடுங்கி வேர்த்துக் கொட்டி எழுந்து நின்று பதட்டமாக காட்சியளிக்க அதைக் கண்டபடி வந்த அகத்தியனுக்கு சந்தேகம் அதிகமானது.

  

நாச்சியாவோ காவல் அதிகாரிகளைக் கண்டதும்

  

”வாங்க வணக்கம் உட்காருங்க” என சொல்ல வந்திருந்த 2 அதிகாரிகளும் இருக்கையில் அமர்ந்தார்கள். அவர்களுக்கு முன் அகத்தியன் தன்னுடன் தன் தாத்தாவையும் உடன் அமர்த்திக் கொண்டான்.

  

வந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் தாத்தாவிடம்

  

”உங்க வீட்டு தோட்டத்தில கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடுகளை பத்தி விசாரிக்க நாங்க வந்திருக்கோம், அது பத்தி சில கேள்விகள் கேட்கப் போறோம் நீங்க அதுக்கு சரியான பதிலை சொல்லனும்” என்றதும் தாத்தா உள்ளுக்குள் பயந்தபடியே சரியென தலையை மட்டும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.