(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”சார் அப்படியே ஆண்டாள் நாச்சியார் எழுதின உயில் எங்கிருக்குன்னு அவரை கேட்டு சொல்லுங்களேன், அதுல மீதி உண்மையும் இருக்கும் அதை தெரிஞ்சிக்கலாம்” என சொல்ல அதிகாரிகளும் சங்கமேஸ்வரனிடம்

  

”உங்க மனைவி எழுதின உயில் எங்க இருக்கு, அதை நாங்க பார்க்கலாமா” என கேட்க சங்கமேஸ்வரனோ தெரியாது என்பது போல கையை விரித்துக் காட்ட அதை யாருமே நம்பவில்லை.

  

அங்கமுத்துவோ விடவில்லை

  

“சார் இவர் இப்படித்தான் சொல்வாரு, கண்டிப்பா உயில் இந்த வீட்ல எங்கயோதான் இருக்கும், தேடிப்பாருங்க சார் கிடைக்கும்” என சொல்ல வந்தவர்களோ

  

”இதப்பாருங்க நாங்க வந்தது எலும்புகூடுகளை பத்தி விசாரிக்கதான், வீட்டை சர்ச் பண்ண சர்ச் வாரண்ட் இருந்தாதான் எங்களால வீட்டை சோதனையிட முடியும், இப்போதைக்கு பெரியவர் தந்த வாக்குமூலத்தை வைச்சி நாங்க அவரை கைது செய்றோம், உங்க யாருக்காவது இதுல ஆட்சேபனை இருந்தா இப்பவே சொல்லுங்க, கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போனபின்னாடி தகராறு செய்யக்கூடாது” என சொல்ல வீட்டினர் அனைவரும் அமைதியாகவே இருந்தார்க்ள அதைக்கண்ட சங்கமேஸ்வரன் அதிர்ந்தான், ஒருவர் கூட தன் பக்கம் நிற்கவில்லையே என திகைத்து நாச்சியாவை பார்க்க அவளோ அமைதியாக நின்றாள்

  

”நீ நாச்சியாவா இல்லை ஆண்டாளா“ என கேட்க அவளோ

  

”நான் திருமதி அகத்தியன்” என்றாள் அதில் அவர் நொந்துப் போனார்.

  

காவல் அதிகாரிகள் உடனே சங்கமேஸ்வரனை கைது செய்தது. அவரை வெளியே கூட்டிட்டு வருகையில் நாச்சியாவின் பெற்றோர்கள் போலீஸ் வண்டியின் டயர்களை பஞ்சர் செய்துவிட வேறுவழியில்லாமல் காவல் அதிகாரிகள் சங்கமேஸ்வரனை நடத்தியே கூட்டிச் சென்றார்கள். அதை ஊரே பார்த்தது என்னவென விசாரிக்கவும் செய்தது, அதற்கு நீதிமன்றத்தில் வந்து

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.