பார்க்குமாறு அதிகாரிகள் சொல்லிவிட மக்கள் மத்தியில் ஒரே சலசலப்பு.
மறுநாள் நீதிமன்றத்தில் சங்கமேஸ்வரனை நிறுத்தினார்கள், அப்போதும் அவர் மாற்றி பேசிவிடக்கூடாதென நாச்சியார் உருவத்தில் ஆண்டாள் நீதிமன்றத்திற்கே வந்து பேசி வைக்க அவள் பேசியதை அப்படியே சங்கமேஸ்வரன் உச்சரிக்க இறுதியில் அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதை விட ஊர்க்காரர்கள் அவரை திட்டுவது, அசிங்கப்படுத்துவது, அவருக்கு கொடுமையாக இருந்தது தான் இவ்வளவு நாட்களாக வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்து கண்கள் கலங்கினார் சங்கமேஸ்வரன்.
நீதிமன்றத்தில் இருந்து அவரை சிறைக்கு அழைத்துச் சென்றார்கள், சிறையில் ஒரு அறையில் அவரை அடைத்தார்கள். மறுநாளே அவர் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளிவந்தது ஆம் சங்கமேஸ்வரன் தான் செய்த தவறுக்காக தான் அனைவரையும் ஏமாற்றிய துரோகத்திற்காக குற்ற உணர்வில் தற்கொலை செய்துக் கொண்டார்.
தகவல் ஊரெங்கும் பரவியது. மக்கள் கொந்தளித்தார்கள் மேலவீதியும் கீழவீதியும் முட்டிக் கொண்டது, எங்கு பார்த்தாலும் அடிதடி கலவரங்கள்தான். இந்த விசயம் காவல்துறையினருக்கும் வந்து அவர்களும் மக்களை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்
மறுபக்கம் வீட்டிலோ அகத்தியன் நிலைகுலைந்துப் போயிருந்தான், அங்கமுத்து இன்னமும் அந்த உயிலை தேடியபடி இருக்க நாச்சியாவோ அகத்தியனிடம் வந்து
”இப்படியே இருந்தா எப்படி இறந்தது உங்க தாத்தா, அவருக்கு செய்ய வேண்டிய ஈமகாரியங்களை நீங்கதானே செய்யனும், போங்க போய் செய்துட்டு வாங்க” என சொல்ல அவனோ மனம் இறங்கவில்லை
”ஊரே கொந்தளிச்சிக்கிட்டு இருக்கு, அதையாவது என்ன ஏதுன்னு பாருங்களேன்“
”என்னால எதையும் செய்ய முடியாது நாச்சியா, தப்பெல்லாம் நம்ம பக்கம் இருக்கறப்ப ஊர் மக்கள்கிட்ட என்ன பேசச் சொல்ற“