ஆரம்பிச்சிட்டாரு, மேல வீதியாளு என்ன சம்பளம் வாங்கறானோ அதையேதான் கீழவீதியாளும் வாங்கறான், எல்லாருக்கும் சரிசமமாதான் வேலைகள் பிரிச்சி கொடுத்திருக்காரு, வேலை செய்றப்ப நாம என்ன மேலவீதி கீழவீதின்னா பார்க்கறோம், முதலாளிகிட்ட வேலை செய்ற வேலைகாரங்க போல நம்ம வேலைகளை நாம செய்றோம் அதுல நாம பிரிவினை பார்க்காதப்ப இதுல மட்டும் எதுக்கு பிரிவினையை பார்க்கனும் சொல்லுங்க”
என சொல்ல அதை மக்கள் அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். கார்கோடகனுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. அவன் அங்கிருந்து சென்றதும் நாச்சியா மக்களைப் பார்த்து
”முதல்ல இப்படி மேலவீதி கீழவீதின்னு பேசறதை நிறுத்தனும், பொதுவா ஒரு பெயர் வைச்சி அழைக்கனும் அப்பதான் மக்கள் ஒற்றுமையா இருப்பாங்க”
”பொதுவான பெயர்னா எதை வைக்கறது ஏதாவது பெரியவங்க பெயர் வைக்கலாமா தாராளமா வைக்கலாம் ஆனா யார் பேர் வைக்கறது” என கேட்க நாச்சியா அதற்கு
”அம்பேத்கார் பெயர் வைங்க, அவர் பொதுவானவர் அவரை பத்தி தெரியாதவங்க இங்க யாரும் இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்” என சொல்ல மக்கள் முகத்தில் மலர்ச்சி, அப்படியே செய்வதாக அனைவரும் கோஷமிட வெற்றியுடன் வீடு திரும்பினாள் நாச்சியா.
அகத்தியனிடம் அனைத்து விவரங்களையும் சொல்லவும் அவனும் முகம் மலர்ந்தான்
”ஊரு ஒண்ணா சேர்ந்ததே பெரிய விசயம், அவங்களுக்காக நான் என்னவேணும்னாலும் செய்வேன் நாச்சியா” என்றான் அகத்தியன் அதற்கு அங்கமுத்துவோ
”ஊர் ஒண்ணாகறது அப்புறம் காவல் அதிகாரி தகவல் அனுப்பியிருக்காரு, உன் தாத்தாவோட இறுதி காரியங்களை யார் செய்றது” என கேட்க அவனோ
”எனக்கு அவரை பிடிக்கலை என்னால அவருக்கு எந்த காரியத்தையும் செய்ய முடியாது“
”இப்படி சொன்னா எப்படி அகத்தியா”