(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”இப்பதான் ஊர் ஒண்ணு சேர்ந்திருக்கு, இப்ப நான் அந்த பாவிக்கு இறுதிகாரியம் செய்தா ஊர் என்னை தப்பா பேசாத என்னை மன்னிச்சிடுங்க என்னால முடியாது மாமா” என்றான் உறுதியாக அதில் அங்கமுத்துவிடம் கலாவதியோ

  

”பார்த்தீங்களா அகத்தியனுக்கு இருக்கற உறுதிகூட உங்களுக்கு இல்லையே, நாம எந்த காரியமும் செய்ய வேணாம்”

  

”அப்ப உன் அப்பாவோட உடலை என்ன செய்றது“

  

”அதை நகராட்சி பார்த்துக்கும் உடலை நாம வாங்கலைன்னா அவங்களே எரிச்சிடுவாங்க இல்லைன்னா புதைச்சிடுவாங்க போனா போகட்டும்”

  

”ம் எப்படி வாழ்ந்த மனுஷன் கடைசியில செத்தும் அவருக்கு ஈமகாரியம் செய்ய கூட நாதியில்லாம போச்சி இதுக்குதான் தப்பே செய்யக்கூடாதுங்கறது” என அங்கமுத்து சொல்ல நாச்சியா அவரிடம்

  

”நீங்களா இப்படி பேசறது”

  

”அட நானேதான் நடந்ததை பார்த்தபின்னாடி எனக்கே ஒரு மாதிரியாயிடுச்சி, இனிமேல நான் எந்த தப்பும் செய்யறதா இல்லை கார்மெண்ட்ஸ் கணக்குல இருந்து எடுத்த ஒன்னே முக்கால் கோடியை நான் என் பொண்ணு ரூபாவதி பெயர்ல பேங்க்ல டெபாசிட் போட்டு வைச்சிருக்கேன், என்னால அதை இப்போ திருப்பி தரமுடியாது அதான் பார்க்கிறேன்” என சொல்ல அகத்தியனோ

  

”பரவாயில்லை இருக்கட்டும் மாமா ரூபா யாரு இந்த வீட்டு பொண்ணு, என் அத்தை பொண்ணுக்கு நான் தர்ற சீரா இருக்கட்டும், அவளை என்னால கல்யாணம் செய்துக்க முடியலைன்னா என்ன அவளை ஒரு நல்லவனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் மாமா”

  

“இது போதும் அகத்தியா இப்பதான் மனசு நிறைவா இருக்கு” என கலாவதி சொல்ல

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.