(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”யார் மேல“ என கேட்டதும் அதற்கு பதில் சொல்ல அவரால் இயலவில்லை, யாரோ வாயை கட்டிப்போட்டது போல உணர்ந்தார், அது என்னவென திகைத்தபடியே நாச்சியாவை பார்க்க அவள் இப்போது நாச்சியாவாக அல்ல ஆண்டாளாக மாறியிருந்தாள், அப்படியொரு கொலைவெறி அவளின் கண்ணில் தெரிய வசமாக மாட்டிக் கொண்டார் சங்கமேஸ்வரன்.

  

”சொல்லுங்க யார் மேல உங்களுக்கு சந்தேகம் இருக்குன்னு, அவங்க எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் சரி நாங்க பார்த்துக்கறோம் சொல்லுங்க” என சொல்ல சங்கமேஸ்வரனால் பேச இயலவில்லை. அவர் நாச்சியாவை பார்க்க அவள் இப்போது ஆண்டாளாக மாறி வாய் அசைத்தாள்

  

”சொல்றேன் எல்லா உண்மைகளையும் சொல்றேன்“ என வாய்க்குள் முணுமுணுத்தாள் உடனே சங்கமேஸ்வரனின் வாய் திறக்கப்பட்டு ஆண்டாள் சொன்னதை அப்படியே சொன்னது

  

”சொல்றேன் எல்லா உண்மைகளையும் சொல்றேன்“ என்று சொல்லிவிட்டு அதிர்ச்சியில் அவரே வாய்பொத்திக் கொண்டார். அதைக் கண்ட காவல் அதிகாரிகளும் அகத்தியனும் திடுக்கிட்டார்கள்

  

”தாத்தா என்னாச்சி தாத்தா ஏன் ஒரு மாதிரி நடந்துக்கறீங்க” என கேட்க அதற்கு தாத்தா வாய் திறவாமலே இல்லை என்பது போல தலையாட்ட உடனே ஆண்டாள் பேசினாள்

  

”எனக்கு ஒண்ணுமில்லை பல வருஷங்களா தேக்கி வைச்சிருந்த உண்மைகளை சொல்றதால கொஞ்சம் பயந்துட்டேன்” என முணுமுணுக்க உடனே அதை அப்படியே சங்கமேஸ்வரன்

  

”எனக்கு ஒண்ணுமில்லை பல வருஷங்களா தேக்கி வைச்சிருந்த உண்மைகளை சொல்றதால கொஞ்சம் பயந்துட்டேன்” என் சொன்னார்

  

”அப்படின்னா சொல்லுங்க என்னதான் நடந்தது” என அகத்தியன் கேட்க இப்போது ஆண்டாள் சொல்வதை அப்படியே சங்கமேஸ்வரன் சொல்லலானார்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.